பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iden

125

image

அடையாளமறிதல் : குறிமுறைப் பெயருள்ள குறியம். ஒரு தகவல் அலகை அடையாளங்காணப் பயன்படுவது. எ-டு ஒரு கோப்பின் பெயர்.

identification division - One of the four divisions of a COBOL programme. அடையாளமறிதல் பிரிவு : கோபல் நிகழ்நிரல் 4 பிரிவு களில் ஒன்று.

identifier - The valid variable. Eg. A beta pay. அடையாளங்காட்டி : செல்லத்தக்க மாறி, எ-டு பீட்டா பே.

identity element - A logical element with binary signals. அடையாளக்கூறு : இருமக்குறி கைகள் உள்ள (0,1) முறைமைக்கூறு.

idle time - The period during which a system or part of it is not used for lack of command. Eg. The printer may be in use but the CPU may have idle time. பயனில் நேரம் : கட்டளை இல்லாததால், ஒரு தொகுதி அல்லது அதன் ஒரு பகுதி இயங்காது இருக்கும் நேரம், எ-டு அச்சியற்றி இயங்கும் பொழுது, மையச் செயலகம் இயங்காது இருத்தல்.

if else structure - A useful one for easy handling. இருந்தால் தவிர அமைப்பு : எளிதாகக் கையாளுவதற்குரிய பயனுள்ள அமைப்பு.

ignore character - புறக்கணிப்பு உரு : கணக்கில் கொள்ளப்பட வேண்டியதில்லை. வேறுபெயர் அழியுரு.

IKBS, Intelligent Knowledge - Based System - - ஐகேபிஎஸ் : நுண்ணறிவு அறிவமை தொகுதி, நுஅ.அதொ.

llakiyasalaram - இலக்கியச்சாளரம் : இலக்கிய மின்னிதழ்.

image - An exact copy of an area of store located in another part of store. படம் : வேறு ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புப் பகுதியின் துல்லிய படி.

image control - படக் கட்டுப்பாடு : இது செவ்வக வடிவப் பகுதி. இதில் படக் கோப்புகள் அமைந்திருக்கும். வரைகலையில் பயன்படுவது.

image processing - A method of inputting two dimensional images to a computer and later enhancing or analyzing the imagery into a meaningful form to the user. Eg. Enhancement of drawings for animation, computer - aided - models. படமுறையாக்கல் : ஒரு கணிப்பொறிக்கு இரு பருமப் படங்களைச் செலுத்திப் பயனாளிக்கு உதவும் வகையில், அவற்றைப் பொருள் உள்ள வடிவத்தில் மாற்றுதல். எ.டு எழுச்சி