பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tur

221

uno



Language -டிடிஎமெல் இணைப்பாடக் குறிமொழி : கணிப்பொறி மொழிகளில் ஒருவகை.

turtle-ஆமை : காட்சித் திரையிலுள்ள சிறிய முக்கோணக்குறி காட்டி. லோகோ மொழியுடன் இணைந்து ஆமை வரைகலையை நிறைவேற்றுவது.

turtle graphics -ஆமை வரைகலை : கணிப்பொறித் திரையில் உருவாக்கப்படும் படங்கள். இவை லோகோ கல்வி நிகழ்நிரலைப் பயன்படுத்துவது.

tutorial - தனிப்பயிற்சி : மென் பொருள் அல்லது வன் பொருளை ஓடவிடும் கட்டளைகள். நிகழ்நிரல் வடிவில் இருக்கும்.

type bar - அச்சுப்பட்டை : அச்சிடும் உறுப்பு. உருக்கள் அல்லது குறிகள் புடைப்பாக இதில் அமைந்திருக்கும் எ-டு துளையிடும் அட்டை அட்ட வணையாக்கியின் அச்சலகின் பகுதி.

type drum -அச்சுருலை:பீப்பாய் வடிவ உருளை, வரி அச்சியற்றியில் பயன்படுவது,பல அச்சிடும் நிலைகளைக் கொண்டது.

type face - எழுத்துமுகம் :குறிப்பிட்ட அச்சியற்றி அச்சிடும் உருக்களின் வடிவமைப்பு.

U

UART, Universal Asynchronous Receiver/Trasmitter- யூஆர்ட்,அனைத்து ஒத்திசையாப் பொறுவி / செலுத்தி, அஒபெசெ : பேரளவு தொகையாக்கு முறைமைச் சுற்று. தொடர் செய்தித் தொடர்பு வலையமைவோடு ஒரு போக்குவாயிலை இணைக்கப் பயன்படுவது.

UCSD Pascal, University of California, San Diego Pascal - யூசிஎஸ்டி பாஸ்கல், கலிபோர்னியப் பல்கலைக் கழகம், சேன்டிகோ பாஸ்கல் : பாஸ்கல் மொழியின் வடிவம். இப்பல்கலைக் கழகத்தால் உருவாக் கப்பட்டது.

unattended operation -உன்னிப்பிலாச் செயல் : வன் பொருளில் பகுதிகள் தாமாக இயங்குதல்.

unattended time -உன்னிப்பிலா நேரம் : கணிப்பொறி நிறுத்தப்படும் நேரம் பேணுகைப் பணிக்கு உட்படுத்தப் படுவதில்லை.

uncommitted logic array - கட்டுப்படா முறைமை அணி : இது ஒருவகை ஒருங்கிணை சுற்று. முறைமைப் பகுதிகள் பலவற்றைக் கொண்டது. இவற்றின் வேலைகள் உற்பத்தியின் பொழுது வரையறைப்படுத் தப்படுவதற்கில்லை. இரண்-