பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyb

61

data


cyberspeak - something that connot be assessed in a keyboard alone.

கணிப்பொறி பேசுகிறது : இதை ஒரு விசைப்பலகையில் மட்டும் மதிப்பிட முடியாது.

cyberterrorism - கணிப்பொறி வன்முறை : சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் செயல்கள். இதைத் தடுக்கத் தேசியத் திட்டத்தை வகுத்த நாடு அமெரிக்கா. இதற்காகக் கணிசமான தொகை ஒதுக்கிக் கணிப்பொறித்துறை அறிஞர்கள் உதவி நாடியுள்ளது. இதைக் கொண்டு தனித்திட்டம் வகுக்கப்பட்டு வன்முறை ஒடுக்கப்படும். இத்திட்டத்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் அறிவித்துள்ளார். (2000)

cyborg - A robot made of biological and machine components கணிப்பொறி உயிரி : உயிரியல் மற்றும் எந்திரப் பகுதிகளால் செய்யப்பட்ட தொலை இயக்கி.

cycle time - memory cycle. சுழற்சி நேரம் : நினைவகச் சுழற்சி.

cyclic storage - A computer storage device; eg magnetic drum. சுழல் சேமிப்பு : கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு. எ-டு காந்த உருளை.


D

daisy chain - A number of devices connected in series: eg. disk drive. சிற்றொடர் : தொடர் வரிசை யில் இணைக்கப்பட்டிருக்கும் பல கருவியமைப்புகள் எ-டு வட்டு இயக்கி.

daisywheel printer - A printer producing high quality hard copy on paper: e.g. program listings. சிற்றாழி அச்சியற்றி : தாளில் உயர்தர வன்படியை உண்டாக்கும் அச்சியற்றி. எ-டு நிகழ் நிரல் பட்டியல்கள்.

Dan Bricklin - டேன் பிரிக்லின்: காட்சிக் கணிப்பாணை (visicalc) 1979-இல் ஆப்பிள் கணிப்பொறிக்காகப் புனைந்தவர்.

DASA - டாசா: இது தகவல் ஈட்டும் அமைப்பு. அமெரிக்கக் கவுல்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எல்லாவகை ஆய்வு முடிவுகளைப் பகுத்துப் பதிவு செய்து விளக்கமாகக் காட்டவல்லது. இது தொழில் துறைப் பயன்பாடுகளுக்கு அதிகம் உதவுவது. எ-டு அதிர்ச்சி, அதிர்வு, தகைவு, திரிபு, ஒலிஇயல், எறிபடை இயல்.

data - Any information which can be processed or communicated: eg. facts, statistics