பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ECL

81

e-com


கையாக மாறிப் பெறுவிக்குச் செல்கிறது. பின் மீண்டும் காட்சிமுனையை அடைகிறது. இதனால் தட்டச்சு செய்யப்பட்ட உரு திரையில் தெரியும் பொழுது, அது அதே போல் உள்ளதா இல்லையா என்று சரிபார்க்கலாம்.


ECL, Emitter Coupled Logic - ஈசிஎல் : உமிழ்வி இணைந்த முறைமை,


e-commerce - மின்வணிகம் : இதைக் கல் காரை வாங்குதல் என்று வேடிக்கையாகக் கூறலாம். கணிப்பொறி வழி வடிவமைப்பு இதன் அடிப்படை மின்னணு ஊடகம் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு இடையே நடைபெறும் வணிக நடவடிக்கை. தவிர, இதில் பல தொழில் நுட்பங்களும் அடங்கும். இது 1995-இல் தொடங்கியது. ஐந்தாண்டு வரலாறு கொண்டது. இதைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) மின்னணுச் செய்தி: மின்னஞ்சல், குரலஞ்சல்.

2) வலையத் தொழில் நுட்பம்: இதில் இணையம் அக இணையம், புற இணையம் என இரு வகை.

3) செய்தித் தொடர்பு ஊடகங்கள்: முகப்புக் குரல், ஒப்படைப்பு வழி, ISDN.

4) மின் ஆவணங்கள்: EDI, EFT.


e-commerce Course - மின் வணிகப் படிப்பு : மின் வணிகம் என்பது மிகப் புதிய தொழில் நுட்பம். விரைந்து வளர்ந்து வருவது. தனியார் கணிப்பொறி நிறுவனங்கள் ஒரு தனிப் படிப்பாகப் பாடத் திட்டம் அமைத்துச் செயற்படுத்தி வருகின்றன. அப்பாடத் திட்டத்தின் உள்ளடக்கங்களாவன:

1. மின்வணிகக் கருத்துகளும், பயிற்சிகளும்.

2. நிகழ்நிரல் அணுகுமுறைகளும், நுட்பங்களும்.

3. தகவல் தள வடிவமைப்பைச் செயற்படுத்தல் இதற்கு மைக்ரோசாஃப்ட் எஸ்குயூஎல் பணியாளி 7.0ஐப் பயன்படுத்தல்.

4. யூஎம்எல்.

5. மைக்ரோசாஃப்ட் முன் பக்கம்.

6. ஜாவா நிகழ்நிரலாக்கம்.

7. எச்டிஎம்எல் நிகழ்நிரலாக்கல் எச்டிடிபி 11.

8. வி.பி எழுத்து, ஜாவா படி எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி, படி எழுதுதல்.

9. டிஎச்டிஎம்எல்.

10. ஏஎஸ்பி, வினையுறு பணியாளிப் பக்கங்கள்.

11. எச்எம்எல், விரிகுறி மொழிகள்.

12. ஐஐஎசில் இடையப் (வெப்) பக்கங்களை ஒம்புதல்.

13. டபுள்யூஎம்எல்.

14. டபுள்யூஎம்எல் எழுத்துப்