பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகுத் திருமாளிகை 165

அவருடைய சொல்லோவியம் மிக அற்புதமாகப் பொருந்தி யிருந்தது. குமாரி எரிச் என்பது அவர் பெயர். மண மாகாதவர். அவர் வயசு என்ன தெரியுமா?

இவ்வளவு அழகாகப் பேசும் அவரைப் பார்த்து எங்கள் குழுவில் ஒருவராக வந்த டாக்டர் மு. வரதராசனர், 'உங்கள் வயசு என்ன?’ என்று கேட்டார்.

'பெண்களே வயசு கேட்கக்கூடாதே! அது நாகரிகம் அல்லவே!" என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னர்.

"நீங்கள் இளமங்கை அல்லவே! வயசு கேட்டால் என்ன?' என்ருர் மு. வ.

'உங்களைக் காதலிக்க எங்களுக்குத் தகுதி போதாது” என்று நீதிபதி ரீ மகராஜன் சொன்னர். எல்லோரும் சிரித்தோம்,

"என் வயசு எண்பது' என்ருர் குமாரி எரிச்.

உண்மையில் நாங்கள் பிரமித்துப் போனுேம், 60, 65 இருக்கும் என்று எண்ணினேம். அடேயப்பா அந்த அம்மாள் நடக்கிற நடை, பேசுகிற மிடுக்கு, அடுக்காக விளக்குகிற அழகு - இவற்றை இந்த காட்டில் இருபத் தைந்து வயசுப் பெண்களிடத்தில்கூடக் காணமுடியாதே!

முதலில் அங்கே உள்ள நாடக அரங்குக்கு அழைத்துச் சென்ருர். 15ஆம் லூயி மன்னர் அதைக் கட்டினராம். 1763ஆம் ஆண்டு முதல் 1768 வரை ஆறு ஆண்டுகள் பெரிய சிற்பியாகிய காப்ரியல் என்பவர் அதைக் கட்டினர். பிற்காலத்தில் 16ஆம் ஆாயியான மன்னருக்கும் மேரி ஆன்டனெட்டுக்கும் இங்கே திருமணம் நடந்தது. இங்கே எல்லாம் மரத்தாலே கட்டப் பெற்றது. இப்போது 700 பேர் உட்காருமளவுக்கு இது விரிவாக இருக்கிறது. 3600 மெழுகுவர்த்திகளை ஏற்றி நடனமாடினர்களாம்.

இந்தப் புள்ளிக் கணக்கையெல்லாம் அந்த எண்பது வயசுக் குமரி சொன்னபோது சும்மாவா சொன்னர்? அவர்