பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 கண்டறியாதன கண்டேன்

கூறும் உதவியாளர்களே வைத்துப் பயணிகளுக்கு எல்லா வற்றையும் விரித்துரைக்கச் செய்கிரு.ர்கள். பிறநாட்டுப் பயணிகளால் அந்த நாடுகள் எவ்வளவோ வருவாயை. அடைகின்றன.

இந்தியாவிலும் உல்லாசப் பயணிகளுக்கு உதவி புரியக் தனியே ஓர் அமைச்சு இருக்கிறது. இருந்து என்ன பயன்' அயல்நாட்டினரின் உள்ளத்தை இழுக்கவோ, அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவோ பயனுள்ள முயற்சிகளேத் தக்க வகையில் அரசோ மற்றவர்களோ செய்யவில்லை. இவ்வளவு விரிந்த நாட்டில், காணத்தக்க காட்சிகளுக்கா பஞ்சம்: தென்னுட்டுக் கோயில்களேத் தக்கபடி விளம்பரப்படுத்தி வெளிநாட்டு மக் க ளே வருவித்துக் காட்டில்ை பணம் குவியும். ஆனல்-?

நாங்கள் ரோமுக்குச் சென்ற அன்று இரவு உல்லாசப் பயணக் கோச் ஒன்றில் ஏறினேம். தி.வோலி என்ற இடத்துக்குப் போகும் கோச் அது. இத்தாலி நாணயம் லிரா. 3000 லிரா அளித்து டிக்கட் வாங்கினுேம். இங்கிலீஷ், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் விளக்கம் கூறும் உதவியாளர்கள் இருக்கிருர்கள். அங்கங்கே ஹோட்டல் களிலும் பிற இடங்களிலும் உள்ள பயணிகளே அழைத்து வந்து ஒரு பொது இடத்தில் கொண்டு சேர்க்கிருர்கள். அங்கே எந்த எந்த மொழியில் விளக்கம் வேண்டுமோ, அந்த அந்த மொழிக்காரர்களுக்குத் தனித்தனியே கோச்சுகளை ஏற்பாடு செய்து அனுப்புகிருர்கள். நாங்கள் ஆங்கில விளக்கம் கிடைக்கும் கோச்சில் ஏறினேம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? , .

ரோமிலிருந்து பல மைல் தூரத்தில் மலைப் பகுதியில் இருக்கிறது. திவோலி. அங்கே பல பல நீரூற்றுக்கள் இருக்கின்றன. இரவிலே அவற்றைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சி. அங்கே போனேம். ஒன்றரை மணி நேரம் கோச்சில் சென்ருேம். அது ஒரு மலை மேல் ஏறியது. திவோலியை அடைந்தோம். .