பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கண்டறியாதன கண்டேன்

அகஸ்டஸ் காலத்தில் எழுந்த கட்டிடம் அது. கி.மு. 27 ஆம் ஆண்டில் பொறித்த லத்தின் கல்வெட்டு அதில் இருக்கிறது. பாந்தியன் என்பதற்குப் புனிதக் கோயில் என் து பொருள். ஏழு கிரக தேவதைகளுக்காக அமைத்த கோயில் இது என்று அந்த லத்தின் கல்வெட்டுக் கூறுகிறதாம்.

படம் 20. புனிதக் கோயில் (பாந்தியன்)

வட்டமான உட்பகுதியின் மேற்கூரை, கவிழ்த்த சட்டியைப் போன்ற வடிவுடையது (Dome). அதன் உச்சியில் வட்டவடிவமாகத் திறந்த அமைப்பு இருக்கிறது. அதிலிருந்து பாயும் இயற்கை ஒளி, உள்ளே உள்ள எல்லாப் பகுதிகளையும் தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறு தெரிவதற்காகவே கணக்குப் பண்ணி அந்த வட்டத் திறப்பை அமைத்திருக்கிருர்கள்.