பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கண்டறியாதன கண்டேன்

பொருளைப் பற்றி ஐந்து கிமிஷம் பேசில்ை பதிவு செய்து பிறகு பி. பி. ஸி.யில் ஒலி பரப்புவதாக அன்பர் சொன்னர். திரு சா. கணேசன் பாரதியார் காரைக்குடிக்கு வந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசினர். திரு கா. அப்பாதுரை மறைமலையடிகளைப் பற்றியும், திரு எஸ். மகாராஜன் டி, கே. சி. யைப் பற்றியும் பேசினர்கள். நான் என்னுடைய ஆசிரியப்பிரான் டாக்டர் ஐயரவர்களேப் பற்றிப்பேசினேன். அதோடு சில நாடோடிப்பாடல்களைப் பாடினேன். அவற்றையும் திரு சங்கரமூர்த்தி பதிவு செய்துகொண்டார். யாவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு தமிழ் மாநாட்டுக்குச் சென்ருேம். -

அன்று பிற்பகலில் 'தமிழும் வடமொழியும்' என்ற பொருளோடு தொடர்புடைய ஆராய்ச்சியுரைகள் கருத் தரங்கில் கிகழ்ந்தன. பேராசிரியர் எமெனு (Prof. M. B. Emeneau) தலைமை தாங்கினர். அவர் அமெரிக் காவில் பர்க்லி என்ற இடத்தில், கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் வடமொழி, மொழியியல் என்பவற்றின் பேரா சிரியராகப் பணி ஆற்றுகிருர், பல ஆண்டுகள் திராவிட மொழிகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். திராவிடப் Gugsriró oraop (Dravidian Etymological Dictionary) அவரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலுள்ள பேரா சிரியர் டி பர்ரோ (T. Barrow) என்பவரும் சேர்ந்து வெளியிட்டிருக்கிரு.ர்கள். நெடுநாள் உழைப்பின் பயனுக மலர்ந்தது அது. ஆராய்ச்சி அறிஞர்களால் மிகவும் பாராட்டப்பெறும் அகராதி அது.

அவர் தலைமையில் முதலில் டாக்டர் ழான் 3.3ມrລບr "தமிழும் வடமொழியும் என்ற தலைப்பில் பேசினர். அவர் வெளியிட்ட கருத்துக்களில் முக்கியமானவை வருமாறு:

தமிழும் வடமொழியும் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவை என்ருலும் இந்தியாவில் ஒன்ருேடு ஒன்று இணைந்து வளர்ந்தவை. ஸம்ஸ்கிருதம் அகில இந்திய மொழியாக இருந்தது. இந்தியர்கள் எங்கெங்கே குடியேறி