பக்கம்:கண்ணகிக் கதை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52

கண்ணகி கதை


கணவனை இழந்தால் காட்டுவ தில்லெனத்
துணிவுடைத் தேவி இணையடி தொழுதாள்
தன்னுயிர் கொண்டவன் மன்னுயிர் தேடினாள்.

வசனம்

உலகிலே தாய் தந்தை, மாமன் மாமி அண்ணன் தம்பி, தமக்கை தங்கை முதலானவர்களை இழந்தால் அம்முறையுடையார் பிறரைச் சொல்லிக் காட்டமுடியும். ஆனால் கணவனை இழந்த பெண்களுக்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டமுடியாதல்லவா! ஆதலினாலே கோப் பெருந்தேவி, கணவனை இழந்தோர்க்குக் காட்டு வதில் லென்று, பாண்டியன் பாதங்களைப் பற்றி வணங்கித் தானும் உயிரைவிட்டாள். இங்ஙனம் அரசனும் தேவியும் இறக்கக் கண்டும் சினத்தணியாத மனங்கொள் கண்ணகி வஞ்சினம் ஒன்று கூறினாள்.

பாட்டு

கற்புடைய பெண்டிர்கள் பற்பலர் பிறந்த
காவிரிப்பூம் பட்டினக் கடிநகர்ப் பிறந்தேன்
விற்பனர் உரைத்ததமிழ் வேதமது கூறும்
மேன்மையுறு கற்புடைய மெல்லியல்யான் என்றால்
வளமான மதுரைநகர் முழுதையும் அழிப்பேன்
வள்ளல்என் கணவன்பேர் அழியாமல் நிறுப்பேன்
உளமானம் ஒழியாது பழியைக் கெடுப்பேன்
உத்தமிஎன் சீரறிய உயருலகை அடுப்பேன்

வசனம்

என்று சொல்லிக் கண்ணகி மதுரையை மும்முறை வலமாகச் சுற்றிவந்தாள். தன்னுடைய இடதுமார்பைத்