10 வேண்டும். ஒருவேளை நீங்கள்கேட்டால் உண்மையைக் கூறலாம். தேவந்தி:- ஆமாம், விலகு. நான் சென்று கேட்கிறேன். (வேகமாகக் கண்ணகி அறைக்குள் பிரவேசிக்கிறாள். கண்ணகி படுக்கையில் ஆழ்ந்த சிந்திப்பில் படுத்திருக் கிறாள். தேவந்தி கண்ணகி உடலைத் தொட்டு அசைத்து) கண்ணகி! கண்ணகி :- (பதறி எழுந்துகொண்டே) யார்? தேவந்தியா! நான் பயந்தே போனேன். இப்படி சப்தமிடாமல் அறைக்குள் நுழைந்து !.. தேவந்தி :- சப்தமிடாமல் நுழைந்தேனா? தன்னுணர் வற்றிருக்கும் உனக்கு நான் சப்தமிட்டுக் கொண்டு வந்தால்தான் எங்கேத் தெரியப் போகிறது? கண்ணகி :- உண்மைதான் தேவந்தி. இருந்தாலும் இப்படி நீ திருடியைப் போன்று உள்ளே பிரவேசித்து என்னைத் தீண்டி இருக்க வேண்டாம்! தேவந்தி:- திருடியா? பெண்ணினத்திற்கு இழுக்குண்டாக் கும் பேச்சு. திருடன் என்று சொல். நான் கண்ணகி :- (சிரிப்பைப் பலவந்தமாக வரவழைத்துக் கொண்டே) பெண்ணினத்திற்கு நீ தரும் உயர்வை ஒப்புக் கொள்கிற தேவந்தி ஆனால், ஆண்மகன் என் அறைக்குள் நுழைந்தான் என்று கூறச் சொல்கிறாயே; அதை எப்படி நான் கூறுவது? தேவந்தி:- நெருப்பென்றால் வாய் வெந்து விடுவதில்லை. ய திருடி என்று கூறாதே; அது பெண்களுக்கு இழுக்கு. திருடனென்று சொல் என்று சொல்ல வந்தால், அன்னிய ஆடவனையா என் அறைக்குள் நுழைந் தானென்று சொல்லச் சொல்லுகிறாய்? என்று கேட் கிறாயே ! ஆடவன் என்று சொன்னால் நாக்கு அழுகியாவிடும்? அல்லது....-
பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/11
Appearance