உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 யாடும் நாட்களிலேயே நான் பார்த்திருக்கிறேனே. அவர் வரவில்லையே என்பதற்காக நான் ஏங்கியதெல் லாம் உண்மைதான். ஆனால் தேவந்தி! உண்மை யாக, சத்தியமாக அவர் இப்பொழுது இங்கு வராம லிருக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வத்தைத் தொழுகிறேன். வந்து விடுவாரோ என்று அஞ்சுவ திலேயே நான் வருந்திக் கொண்டிருக்கிறேன்! அதுவே என் துக்கத்திற்குக் காரணம்! நான் உணவு கொள்ளா மைக்கும் அதுவே காரணம்! தேவந்தி:- ஏன் அப்படி? (சந்தேகமாகக் கண்ணகியைப் பார்க் கிறாள்) கண்ணகி:- சந்தேகிக்காதே தேவந்தி. தவறுவது தமிழகத்துப் பெண்களின் சரித்திரத்திற்குப் புறம்பானது. என் தோழிதானே நீ!உன்னிடத்தில் என் மனத்தைத் திறந்து கூறுகிறேன்! தேவந்தி:- வந்தாயா வழிக்கு! மனத்தில் உள்ளதை ஒளிக் காமல் சொல். மாற்றான் படைக்குள் புக வேண்டு மானாலும் முடியும். என் பால்ய சிநேகிதியான உனக் காகச் செய்யக் காத்திருக்கிறேன். கண்ணகி:- உன்னிடத்தில் நான் எந்த உதவியையும் எதிர் பார்க்கவில்லை தேவந்தி, ஓட்டமின்றி மனத்திலே சுழன்று கொண்டிருக்கும் எண்ணத்தை யாரிடத்தி லாவாது சொன்னால்தானே மனப்பளு அகலும்? நீ என் உற்ற தோழி. உன்னிடத்தில் கூறுகிறேன். இப்படி என் பக்கத்திலே அமரு. (தேவந்தியின் கரத்தைப்பற்றித் தன் படுக்கை மீது அமர வைக்கிறாள்) தேவந்தி - (கண்ணகியின் தலை உரோமத்தைக் கோதிக் கொண்டே) சொல்லு கண்ணகி. இளமையும், எழிலும் துள்ளும் தங்கப் பிழம்பாகிய உன்னை வீட்டிலே வைத்து விட்டு, 'அவர்' அப்படி மாதவி வீடே கதி என்று கிடந் தால், உள்ளம் உனக்குத் துடிக்காதா? நானாக மட்டு மிருந்தால் அவளை- அந்த மாதவியை......