உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ 15 திரும்பி வருமளவும் திடச் சித்தத்துடன் காத்திராமல் தெய்வம் தொழுது கணவனை வேட்டல் சபலப் புத்தி: புலனடக்கம் இல்லாத் தன்மை- கற்பிற்கு மாசுண் டாக்கும் கயமைத்தனம் என்பதைத்தான் கூற வந்தேன். அவருக்கர்ப்பணித்த உடலை அவரின்றி வேறு யாரும் தீண்ட நாம் அனுமதியோம். அவர் சொத்தில் அவர் நினைப்புக் கொண்டு தானாக வருமள வும் நாம் அவருக்காக உள்ள உடலைச் சுமந்தவாறு காத்திருக்க வேண்டும். இதுதான் நெறி-இதுதான் கற்பு. ஈதன்றி தெய்வம் தொழுது சீக்கிரம் கணவனைக் கொண்டு சேர்' என வேட்டல் உறுதி யில்லா மனம் படைத்தோர் செய்கை. இது தமிழகத்தின் பண்பாடல்ல. வருந்தாதே. நான் வர முடியாது! தேவந்தி - நீண்ட பிரசங்கம் புரிந்து விட்டாயே! கண்ணகி :- கற்பைப் பற்றி நான் கொண்டுள்ள கருத்தைச் சொன்னேன். குற்றமிருப்பின் மன்னிப்பாயாக! சதி :- (அவசரமாக ஓடி வந்து) அம்மா! அம்மா! ஐயா, நம் ஐயா, வருகிறார். அதோ நம் வீட்டிற்கே வருகிறார். எழுங்களம்மா! வரவேற்கத் தயாராகுங்கள். கண்ணகி :- என்ன? அவரா! அப்பொழுது நான் கண்ட கனவு? தேவந்தி:- நான் போய் வருகிறேன் கண்ணகி. (கண்ணகி கலக்கம்! தேவந்தி செல்லல்) (Amr) பொன் தொடீ இ. கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் மடல் அவிழ்நெய்தல் அம்கானல் தடம் உள