உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும் மற்றுமற்றும் வினவுதுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே ! (கிள்ளிவளவன் பாடியது. செய்யுள் எண் 173 புறநானூறு) இப்பாடலைப் பாடிய கிள்ளிவளவன் சோழ வேந்தர் களில் ஒருவன். ஆனால் பாணன் பாடியதாகக் காட்சிப் படுத்திக் கூறியிருக்கிறான். மன்னனாகயிருந்தும் வறுமை யுள்ளளவும் வள்ளல்களும் தேவையென்று கருதியதினால் தன்னிலும் தாழ்ந்த பண்ணனை- அவன் வள்ளல் தன்மையை- பசிப் ஆனாலும் இந்தப் பாடிச் சிறப்பித்திருக்கிறான். பிணி மருத்துவர் (வள்ளல்கள்) மனித சமூகத்தின் நிரந்தர வாழ்வினராகிவிடக் கூடாதென்ற அவன் மனப்பான்மை, "யான் வாழு நாளு... என்று பாணன் கூறினான் என வரும் வரியிலே பிரதிபலிக்கிறது. இவைகளுக்கும் மேலாகப் புலவர்களின் இதயத்தைக் கவர்கின்றன, அவன் படுத்திக் காட்டியுள்ள, அந்தப் பழுத்த மரத்துப் பறவை யொலியும், பசித்த மக்கள் உணவு கண்டதால் எழுப்பும் உணவு முந்தல் சண்டையொலியும், சோறு ஏந்திய சிறுவர் அணியும், முட்டை ஏற்று நடந்த எறும்புச்சாரையும். இப்படிச் சொல்வது சொந்த சிந்தனையாளர்களுக்கே உரித்தானது. 97 காட்சிப் "சாட்டை" திங்கள் ஏடு 20-3-1960