உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகியின் கனவு 1985.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் பொது மேலாளர் திரு. இரா. முத்துக் குமாரசாமி M. A. அவர்களின் அணிந்துரை தமிழிலக்கியம் என்பது ஆழ்ந்தகன்ற பெரிய கடல். அதன் ஆழத்தில் பொதிந்து கிடக்கும் இலக்கிய நன்முத்துகளை மூச்சுப்பிடித்து மூழ்கி நமக்கு எடுத்துத் தந்துள்ளவர் பெரியவர். பெருமதிப்புக்குரியவர் நம் கவிஞர் உயர்திரு கா.மு. ஷெரீப் அவர்கள். சிந்தையையள்ளும் சிலப்பதிகாரம் தமிழ் மக்களால் புறக் கணிக்கப்பட்டிருந்த ஒரு நிலை. பொழுது போக்காக மாபாரத ராமாயணக் கதைகளில் மட்டுயே தமிழர்கள் மனதைப் பறி கொடுத்திருந்த சூழல். அந்நிலையில் செந்தமிழின் சிறப்பைப் பறைசாற்றும் சிலம்பின் பெருமையை மக்களுக்கு எடுத்து விளக்கப் பல்வேறு கட்டுரைகளைக் கவிஞர் பெருமகன் இலக்கிய, அரசியல் ஏடுகளில் தீட்டி வந்தார். சிலம்பிடம் மட்டும் அவர் சிந்தையைப் பறிகொடுத்தார் என்பதில்லை. தங்க இலக்கியமாம் சங்கப் பாடல்களையும் எளிய கட்டுரைகள் வாயிலாக விளக்கினார். அகம், புறம், கலித் தொகை முதலிய எட்டுத் தொகை நூல்களின் ஏற்றமும் இவரால் மக்களுக்குப் பறைசாற்றப் பெற்றன. வையணைத்திற்கும் மேலாக இவரைச் சமயப் பொறை மிக்க சான்றோர் என எடுத்து காட்டுவது ஆழ்வார் பாசுரத்தின் பக்திச் சுவையை விளக்கும் கட்டுரையாகும். ஞான விளக்கை ஏற்றி, எலும்புருக, நெஞ்சுருக, வழிபட்டால்தான். கடவுளைக்