உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணடக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 9 அன்பு மழை கொட்டும் விழிகளைத் திறந்திருக்கிறேன் நான்!” 6 6 - 'விழிகளைத் திறந்தாய் - ஆனால் ஒளிதர உன்னால் இயலாது! பத்து வருடமாக மூடிக் கிடந்தால் தூர்ந்து விட்ட கிணறுபோல் ஆகிவிட்டதப்பா என் கண்கள்! ஓரு ஆண்டா, இரு ஆண்டுகளா? பத்து ஆண்டுகள் அல்லவா இந்தக் கண்ணடக்கம் என்? விழியை மறைத்துக்கொண் டிருந்திருக்கிறது. இனி என் கண்களுக்கு ஒளிதர, அந்த ஒளியிலே கருணை ததும்பச் செய்ய யாராலும் முடியாது தயவு செய்து போய்விடு !"-காளி அழுகுரலோடு ஆத்திர மாகப் பேசினாள். 4 பக்தன் சற்று நேரம் நின்றான்-காளியைப் பார்த்து ஏளனமாகச்:சிரித்தான். நெற்றியிலே மிச்சம் மீதி ஓட்டிக் கொண்டிருந்த குங்குமம், திருநீறு ஆகியவற்றை நன்றாக அழித்து நெற்றியைத் தூய்மைப்படுத்திக்கொண்டான். கோயிலிலிருந்து விடுபட்டு ஊரை நோக்கி ஓடினான். எதிரே, இரண்டு மூன்று கார்களில் டாக்டர்களும் அவர்கட்கு உதவியாளர்களும் வந்திறங்கினார்கள். ஊர் மக்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள் அவசர மாகக் குத்தப்பட்டன. ஊருக்குத் தேவையான-உடனடி யாகச் செய்யவேண்டிய சுகாதார வேலைகளை இரவோடு இர வாக டாக்டர்கள் செய்யத் துவங்கினர். பக்தனும் அந்தப் பணியில் முன்னின்றான். . 0 0 . ஃ திடீரென விழித்துக் கொண்டேன். கண் வைத்திய சாலையில் இரண்டு கண்களும் கட்டப்பட்ட நிலையில் படுத் திருப்பதை உணர்ந்தேன். எனக்குச் செய்தது போல எத்தனை ஆப்பரேஷன் செய்தாலும் அந்தக் காளிக்குக் கண் திறக்காது என்பதை எனக்கு நானே எண்ணிக் கொண்டு சிரித்துக் கொண்டேன்; அந்த வேதனையான வேளையிலும்! க2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/10&oldid=1696708" இலிருந்து மீள்விக்கப்பட்டது