உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணடக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 66 நெருப்பு . கல்லூரித்தொடர்பு அருளையும் பூபதியையும் ஆருயிர்த் தோழர்களாக்கியது. அருளைத் தனியே கணடவர்கள். “பூபதி எங்கே ;" எனக் கேட்பதும், பூபதியைக் காண்ப வர்கள், " அருள் நலந்தானே?” என்று கேட்பதும் வழக்கமாகிவிட்டது-அந்த அளவுக்கு அவர்களின் நட்பும் வளர்ந்தது. வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளத் தான் அருள், பூபதியை அண்டிக் கிடக்கிறான் என்ற சொல் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அருள் மிக எச்சரிக்கை யாக இருந்து கொண்டான். படிப்பதற்குப் பணமில்லாமல் கடைசியாக மிஞ்சியிருந்த சில ஏக்கர் நிலங்களையும் தந்தை விற்றுவிட முடிவு கட்டிய வேளையில்கூட அருள், பூபதியிடம் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. அப்படி விற்கப்பட்ட நிலத்திலேயிருந்து கிடைத்த பணத்தில் ஒரு நூறு ரூபாயை பூபதிக்கு அவசரக் கடனாகக் கொடுத்து-பிறகு அவன் திருப்பித் தந்தபோது வாங்கிக் கொண்டான். எந்த நேரத் திலும் எதையாவதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதும்... புத்தர் காந்தி, சாக்ரடீஸ் போன்ற பெரியவர்களின் அற வாழ்வைப்பற்றி ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டிருப்பதும் அருளின் வாடிக்கையாக இருப்பது பூபதிக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் எப்படியோ ஒரு பாசம் அவர்களை நண்பர் களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தது. அருள் விரும்பு கின்ற நிறம் ஆகாயத்தின் நீலமென்றால், பூபதி விரும்பு கின்ற நிறம் எலுமிச்சம்பழத்தின் மஞ்சளாக இருக்கும். அருள் படிப்பது “உலகைத் திருத்திய உத்தமர்கள் ”என்ற என்னும் நூலாயின் பூபதி உலகப் பேரழகி கிளியோ ஏட்டில் மூழ்கியிருப்பான். புராணக் கதைகளுக்குப் புது மெருகு தரப்பட்டுப் பொன் வண்ணத்தில் முகப்புச் சித்திர மும் தீட்டிய புதிய மொந்தையில் பழைய மது தரப்படுகிற தல்லவா ; அந்த மதுமயக்கத்தில் பூபதி ஆழ்ந்துவிடுவான். சந்திரனும் தாரையும், இந்திரனும் அகலியையும், கண்ண னும் ராதையும் இப்படிக் குவிந்தன அவனது நூலகத்தில் ஏடுகள்! தாபத்தால் தவிக்கின்ற தாரையின் உடற்கொதிப் பையும் உள்ளத் துடிப்பையும் ஒரு நொடியில் குளிரச் செய்த சந்திரனின் தழுவலிலே அவள் மெய் மறந்து கிடந்த 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/13&oldid=1696711" இலிருந்து மீள்விக்கப்பட்டது