உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணடக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 21 தங்கள் காலடிகளை என் கண்ணீரால் குளிப்பாட்டி விட்டுக் கண்ணை மூடுவதில்தான் எனக்கு நிம்மதி!.... வருவீர்களா? அன்புள்ள, “பிரபா.” கடிதத்தை மடித்துப் பெட்டியிலே வைத்தான், 'கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறின. தனக்குத்தானே சற்று உரக்க, ஆகாயத்தைப் பார்த்து, "உன்னை மன்னித்துவிட்டேன் பிரபா!” என்று கதறினான். அந்த ஒலி புகை வண்டியின் ஒலியோடு காற்றில் கலந்தது. வண்டி, சிதம்பரம் நிலையத்தில் நின்றது. அருள், ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தான். யார் அது ? ..... பூபதி ! ஆம் அவனேதான்- முதல் வகுப்பு வண்டியிலேயிருந்து எட்டிப்பார்த்தான். அருள் தன்னை மறந்துவிட்டான். “பூபதி” என்றவாறு, ஓடிப்போய் முதல் வகுப்பில் ஏறிக்கொண்டான், பூபதிக்கு ஒன்றும் புரிய வில்லை அதற்குள் ரயிலும் புறப்பட்டுவிட்டது. 6 6 மௌனமாக இருந்த பூபதியைப் பார்த்து " இது யார்?” என்று பக்கத்திலேயிருந்த ஒரு பெண்ணைக் காட்டி னான் அருள்! 6 6 6 6 ‘இதுதான் என் மனைவி!” . ஓகோ...அப்படியா? . !. ம்... என் மனைவி சௌக்கிய மாக இருக்கிறாளா பூபதி?" பூபதி, திடுக்கிட்டான். முகம் வெளுத்தது! பூபதியின் மனைவியும் விழித்தாள் எதுவும் புரியாமல்!.. 6 “என்னடா விழிக்கிறாய்? என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லையாம்- அதைப் பார்க்கத்தானடா போகிறேன். இப்பொழுது அவள் உனக்கு வைப்பாட்டியாக இல்லையா?... சாறற்ற சக்கையாகி விட்டாளாக்கும்!" .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/22&oldid=1696720" இலிருந்து மீள்விக்கப்பட்டது