உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணடக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 மு. கருணாநிதி 25 'பூரண சுகம்-நல்ல ரெஸ்ட் வேணும். அவ்வளவு தான்!" சூர்யா சொன்னாள் இப்படி. குண்டப்பன் பேசிக்கொண்டே யண்டை 6 6 அவள் படுக்கை போய் நின்றான். வேணி!” என்று அழைத் தான். நோயினால் முணகிக் கொண்டிருந்த வேணி, அவனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு வேறு பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். இரண்டு மூன்று நாட் களாய் பிரக்ஞையற்றிருந்து, இன்றைய தினம் கண் விழித் திருக்கும் வேணி, குண்டப்பனைக் கண்டதும், வேறு பக்கம் திரும்பிப்படுத்துக்கொண்டது சூர்யாவுக்கு ஆச்சர்யத்தைத் தான் அளித்தது. அவள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. குண்டப்பனும் நிலைமையை சமாளித்துக்கொண்டு- சூர்யர விடம் - "சரி - நான் வருகிறேன்" எனக் கூறியபடி அவளி டம் ஏதோ ரகசியம் கூற வேண்டுமென்று ஜாடை காட்டி தனியாக அழைத்தான். சூர்யாவும் அந்த ரகசியத்தை ஆவலுடன் எதிர்பார்த்தாள். 6 6 - "சூர்யா! வேணி ஜாக்கிரதை! ஓடிவிட்டாலும் ஓடி விடுவாள்!" என்று கூறிவிட்டு அவன் வேகமாகப் போய் விட்டான். சூர்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. க ஓடிவிடுவாளா? ஏன் ? எதற்காக சார்ஜண்ட் அப்படிச் சொன்னார்? அப்படியானால் யார் இவள்? இதுபோன்ற கேள்விகளின் அடிமையானால் சூர்யா. குழப்பத்திலே எது வும் வேலை ஓடாமல் தன் மேஜையண்டை போய் உடகார்ந் தாள். சிந்தனை அதிகமாயிற்று. வேணியின் கட்டில் பக்கம் திரும்பிப் பார்த்தாள். திடுக்கிட்டாள். காரணம், வேணி அங்கில்லை. அவள் அந்தக் கூடத்தைவிட்டு அப்போது தான் வெளியே நழுவிக்கொண்டிருந்தாள். சூர்யா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தோடி வேணியைப் பிடித்துக்கொண்டு எங்கே ஓடுகிறாய்?" என்று அதட்டிக்கேட்டாள். 6 8 66 - அம்மா - என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குக் கோடி புண்யமுண்டு.'- அந்த யுவதி அழுதாள். க-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/26&oldid=1696724" இலிருந்து மீள்விக்கப்பட்டது