பக்கம்:கண்ணன் கருணை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31 கண்ணன் 'அன்பனே நீ அறிந்தது கொஞ்சம் அறிய வேண்டியது மிக அதிகம் ஆதலின் அகமும் புறமும் தூய்மையாகி நினைவும் உணர்வும் சொல்லும் செயலும் எனக்கே ஆக்கி தியானத்தில் ஆழ்ந்துபார்". என்றே காண்டீபனுக்கு அருளினுன் கண்ணன்

காண்டிபன் 'கண்ணப் பெருமானே மணிவண்ணப் பெருமாளே ஒன்ருய் பலவாய் உருவாய் திருவாய் எனையாளும் தெய்வ மே இறைவனே திருமாலே போதனையில் ஒருகணம் புத்தி தெளிகின்றேன் மறுகணம் மயக்கத்தில் ஆழ்கின்றேன் மன்னிக்க. தோழனும் துணைவனும் தொண்டனும் தலைவனும் குருவும் உறவும் ஆன என் கோவிந்தா அணுவினும் அணுவாகி அண்ட போண்டமாகும் நினதரிய பெரிதினும் பெரிதான திருவுருவை தெரியக் காட்டி என்னைத் தெளிவிப்பாயே." என்று கண்ணன் கழலடியைப் பற்றினுன்