இயல்-1 வழிவழிக் கண்ணன் தமிழ் மக்களின் பண்டைய சமயங்களுள் ஒன்று திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபட்டுவந்த முறையாகும், பண்டுதொட்டே தமிழகத்தில், திருமால் சமயம் தோன்றி நிலைபெற்றது என்பதற்குத் தொல் காப்பியம் போன்ற தமிழ் முன்னுரல்களே சான்றாக நிற்கின்றன. நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நான்காகப் பகுத்தும் அந் நிலங்களுக்குத் தெய்வங் களை வகுத்தும் போந்தவர்கள் ஆதித் தமிழர்கள். அவர்கள், காடு சார்ந்த முல்லையையும் அதன் தெய்வ மான திருமாலையும் முதற்கண் வைத்து சிறப்பித் துள்ளமை, "மாயோன் மேய காடுறை உலகம்' என்ற தொல்காப்பிய நூற்பாப் பகுதியால் அறியக்கிடக் கின்றது. இதனால் நானிலம்’ என்ற பெயரை இந்த நிலப் பகுதி பெறுவதற்கு முன்னரே திருமாலுக்கு உரிமை யும் தலைமையும் தமிழகத்தில் ஊன்றிவிட்டன என்பது தெளிவாகும். இந்த உரிமை பற்றியே சேக்கிழா? பெருமானும், 1. தொல், பொருள். அகத்திணை-5
பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/15
Appearance