பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 麓65 மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்; காத்திருப் பேனா டீ?-இதுபார் கன்னத்து முத்த மொன்று! பெற்றோர்கள் சம்மதம் பெற்று. வதுவை மணமுறைகளை மேற்கொள்வதற்குமுன் அச்சாரமாக முத்தமொன்று தரவிழைகின்றார்; அதனை அவள் முகத்தில் பதித்தும் விடுகின்றார்: இந்தப் பாடலில் பாரதி கையாண்டுள்ள உருக்காட்சி கள் யாவும் இயற்கையினின்றும் தேர்ந்தெடுத்துக் கொண்டவை. சங்க இலக்கிய மரபுப்பிடி கற்புக்கு முன் களவு மணம் தொடங்குகின்றது. பொங்கி எழும் காதலுக்கு முன் சமூகம் விதித்துள்ள ஒழுங்கு முறைகள் யாவும் தவிடுபொடியாகி விடுகின்றன. இரண்டாம் பாடல்: இப்பாடலில் அற்புதமான நிகழ்ச் சியைச் சித்திரித்துக் காட்டுகின்றார் கவிஞர். மாலைப் பொழுதில் ஒருநாள் கடற்கரையில் கடலை நோக்கிய வண்ணம் மணல்மீது அமர்ந்திருக்கின்றார். அப்போது மூலைக் கடலினை வான வளையம் முத்தமிட்டுத் தழுவி முகிழ்த்தலைக் காண்கின்றார். தம்மையே மறந்து பகற் கனவில் ஆழ்ந்து விடுகின்றார். பின்புறத்தில் யாரோ வரும் ஆளரவம் மெதுவாகக் கேட்கின்றது; அந்த ஆள் நிற்பதால் பகற்கனவு கலையத் தொடங்குகின்றது. வந்த ஆள் கவிஞரின் கண்களைப் பொத்துகின்றார். இதனை 7. பாரதியார் திருவல்லிக்கேணியில் வாழ்ந்தி போது மெரீனா’க் கடற்கரையில் பல நாட்கள் கழித்தி வேண்டும். அப்போது இப் பாடல் தோன்றியிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.