பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ的む கண்ணன் பாட்டுத்திறன் நம்மாழ்வார் கருத்தையும், இதயந்தனிலே அமர்வாய்" என்ற அடிதத்துவத் திரயத்தின் கருத்தையும் ஒருபுடை ஒத்திருப்பதாகக் கொள்ளின் வாதத்திற்கு இடம் இல்லை. இதையே இன்னோர் இசைப்பாடலில், ! பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப் பீடத்தி லேறிக் கொண்டாள் என்து பல்லவியாகத் தொடங்குகின்றார். கண்ணனைக் கண்ணம்மாவாக்கித் தம் இதயத் தாமரையில் ஏற்றி மகிழ்கின்றார் கவிஞர். எல்லாக் கடவுளர்களையும் தாம் குலதெய்வமாக வணங்கும் பராசக்தி' யாக்கிவிடும் அற்புதத் திறன் படைத்தவர் நம் கவிஞரீ கோமான். இதே இசைப்பாடலில், கண்ணன் திருமார்பில் கலத்த கமலை என்கோ? (கமலை இலக்குமி1 என்றும் பேசுகின்றார், பாரதியார் சில சமயங்களில் ஒருவித சமரசத்தைக் காண்பவராயினும், அவரது குல தெய்வமாக இருப்பது *சக்தி தேவதையே. அவரது பாடல்களை ஊன்றி.பி படித்தால் அவர் ஒரு சக்தி வழிபாட்டாளர் என்பது தெளிவாகும். இதனால் அவர் கண்ணனைக் கண்ணம்மா வாக்கி ஆந்தக் கண்ணம்மாவைக் குலதெய்வமாக்கினார் என்று கருதுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம்: சூதில்லை காணுமிந்த நாட்டீர்!-மற்றத் தொல்லை மதங்கள் செய்யுந் தூக்கம்: 24 தோ. பா.-54 மணப்பீடம். 25. மேலது.23. சக்திவிளக்கம்