உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ரொட்டித்

கொண்டிருக்கிறான். சில விநாடிகளில் சலித்துப்போய் சிகரெட்டை அணைத்துப்போட்டுவிட்டு குளிர்ச்சியான அறைச் கதவைத் திறந்து பழச்சாறு எடுத்துப் பருகுகிறான். அதிலேயும் பாதியை வைத்து விடுகிறான். தற்செயலாக, கதிர்வேலு வைத்து விட்டுப்போன பெட்டி மீது பார்வை விழுகிறது. திறந்து பார்க்கிறான். பெட்டி நிறைய எழுதி ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காகிதக் கட்டுகள் காணப்படுகின்றன. பெரிய எழுத்தில் 'ரொட்டித் துண்டு' என்ற தலைப்பும் இருப்பது தெரிகிறது. அதை எடுத்துப் பார்க்கிறான்; சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு படித்துப் பார்க்கிறான். இரண்டொரு பக்கங்கள் படிக்கும் போதே, சுவை தட்டுகிறது. மேற்கொண்டு படித்துப் பார்க்கிறான். 'பாரத்! பாரத்!' என்று குரல் கேட்கிறது. வெளிப்புறமிருந்து. பாரத், "வாடா மைனர்" என்று பதில் குரல் கொடுக்கிறான். நண்பன் வருகிறான். பாரத் பூஷண் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு...

நண்பன்: என்னடா, அதிசயம் இது! ஒரே அடியாகப் படிப்பிலே மூழ்கிவிட்டிருக்கே?

பாரத்: வா, வா! நன்றாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லு.

[காகிதக் கட்டைத் தருகிறான்.]

நண்: (வாங்கிப் புரட்டிப் பார்த்தபடி) என்னது? ரொட்டித்துண்டா? பலே, பலே! கதையா! கதை எழுதிவிட்டாயா