120
ரொட்டித்
போ!போ! பக்குவமாகப் பேசிக் கொண்டே கட்டிப் போட்டு விடு... கதவை வெளிப்பக்கம் பூட்டிவிடு...வாசற்படியை விட்டு நகராதே... இதற்கு ஒரு பெரிய டாக்டர் இருக்கிறார். வரவழைக்கிறேன். நம்மால் ஆனதைச் செய்து பார்ப்போம்.
காட்சி—24.
இடம்: அயோத்திய மாளிகை தனி-அறை.
இருப்: ராம்லால், பாரத்பூஷண்
நிலைமை: பாரத்பூஷண் சொன்னது கேட்டு, ராம்லால் ஆனந்தம் அடைகிறார். முதுகில் தட்டிக் கொடுக்கிறார்; அணைத்துக் கொள்கிறார்.பாரத்: (சிறிதளவு கவலையுடன்) ஊரெல்லாம் பாராட்டு! விருந்து வைபவம்! தொழிலாளர் தோழன் என்ற பட்டம். உலக எழுத்தாளர் மகாநாட்டுக்கே அழைப்பு வந்துள்ளது அப்பா! இந்தச் சமயத்தில் கதிர்வேல் வெளியே வந்து, கண்டபடி உளறினால், என்கதி என்ன ஆகும்! ரொட்டித்துண்டு நான் எழுதியது அல்ல என்று தெரிந்து விட்டால் கல்லால் அடிப்பார்கள், காரித் துப்புவார்கள். பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேனப்பா! என்ன செய்வது?
ராம்: என் வயிற்றில் பால் வார்த்தாயடா மகனே! பதறிப் போனேன், படித்ததும். ஆலைக்குச் சொந்தக்காரனாகி அதிகாரம் செலுத்த வேண்டிய என் மகனா இப்படி எழுதினான் என்று ஆத்திரம் எனக்கு.
பாரத்: ஏம்பா! ரொட்டித்துண்டு புத்தகத்திலே இருப்பதெல்லாம் என் எண்ணம்-எனக்குச் சம்மதமான எண்ணம் என்றா எண்ணிக் கொண்டு விட்டீர்கள்?