உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கண்ணாயிரத்தின்

இளை.: (சிகரெட் பற்றவைத்துக் கொண்டே) நல்லா .. துடைச்சியா?

வேலை.: ஆமாங்க...

இளை.: எதை?

வேலை.: பூட்சை..

இளை.: மடயா! முதலிலே உன் அழுக்குக் கையை துடைத்துக்கிட்டயா?

வேலை.: (இளைஞன் வேடிக்கையாகப் பேசுவதை உணர்ந்து, ஒரு அசட்டுச் சிரிப்புடன்) ஓ! கைகளைச் சுத்தமாக்கிக்கிட்டு, பிறகுதாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

[இளைஞன் புன்னகை காட்டிவிட்டு, அறைக்கு உள்ளே செல்கிறான், கதவை மூடிக்கொண்டு. அறைக் கதவு சரியாக மூடப்படாததால், உள்ளே இளைஞன், மேனாட்டு உடை அணிந்துகொள்வதும், நிலக்கண்ணாடி முன்பு நின்று சரி செய்து கொள்வதும் வேலையாளுக்குத் தெரிகிறது. பலமுறை கண்டிருப்பதாலும், அந்தஸ்துக்கு ஏற்ற அலங்காரம் இருக்கும்—இருக்க வேண்டியதுதான் என்ற இயல்புள்ளவன் என்பதாலும், வேலையாளின் பார்வையில் வெறுப்போ, அலட்சியமோ தென்படவில்லை. 'கண்ணாயிரம்! கண்ணு!' என்று கூப்பிட்டுக்கொண்டே, நடுத்தர வயதைக் கடந்து, மூதாட்டி என்ற கட்டம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தோற்றமுள்ள மாது அறையை நோக்கி வரக் காண்கிறான். ஓரளவு மூடப்பட்டிருக்கும் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு மாது உள்ளே நுழைந்தபடி...]

மாது.: கண்ணாயிரம்! டே, கண்ணு!