உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கண்ணாயிரத்தின்

சிங்: அவன்தான் சொல்றானே, உன்னைத் தெரியாதுன்னு.

பெ: இவரோட அப்பன்தானே நீ. நீ வேறே எப்படிப் பேசுவே! மரியாதையா... பணத்தைக் கொடுத்து... அனுப்பிவையுங்க... உங்களோட உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்து போயிடுவேன்னு மட்டும் எண்ணிக் கொள்ளாதீங்க. ஊர் சிரிப்பா சிரிக்கும்! அவமானத்தைத் தாங்கமாட்டிங்க...பெரிய இடம்...தெரியுதே இலட்சணம்! என்னை வம்புக்கு இழுத்து வீணா அவமானப்படாதிங்க..

[கண்ணாயிரம் தலை கவிழ்ந்துகொண்டு நிற்கிறான். சிங்காரவேலர் பொறி பறக்கும் கண்களுடன் அவனைப் பார்க்கிறார்.]

சிங்: கண்ட படி சுத்துவதாலே வருகிற வினைடா இது, வினை...

[கண்ணாயிரம் மாடிக்குச் செல்ல முனைகிறான். பெண் அவனைத் தடுத்து நிறுத்தி...]

பெ: உன் யோக்கியதை தெரியுது இப்ப...அப்ப கொஞ்சினே; கெஞ்சினே...கூத்தாடினே...பாட்டு வேறே (கேலிக்குரலில்) நாடியா! ஓடியா! ஓடியா! நாடியா! பாட்டு அப்ப! இப்ப நான் அவளைப் பார்த்ததே கிடையாதே!

சிங்: (கோபத்துடன்) போதும், உன் பேச்சை நிறுத்திக்கொள்ளு. ஐம்பது ரூபாயா வேணும்?

பெ: தரனுமல்ல, இனாமல்ல: என் பையிலே இருந்த பணம்...

சிங்: (சலிப்புடன்.) போடா...போய், ஐம்பது கொண்டா, அலமாரியிலே இருக்குது.

பெ: (கண்டிப்புடன்) மேலே ஒரு அஞ்சு கொண்டு வாங்க சார், பைவாங்க...பெரிய மனிதர்களாம் பெரியா மனிதர்கள்! எதிலேன்னுதான் தெரியல்லே. நாங்க வயத்துச்