உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கண்ணாயிரத்தின்

கண்: அண்டப் புளுகுகளை.. அப்பா! நாமெல்லாமா அண்டப் புளுகு பேசுவது? வயிற்றுச் சோற்றுக்கு வகையற்றவர்கள் செயல் அல்லவா அது? நீங்கள்தானே சொன்னீர்கள். (குத்தலாக) நான் பயந்தே போனேன். நமது அப்பா இவ்வளவு அருமையாக உபதேசம் செய்கிறாரே...பொய் பேசுவது தகாது என்று கூறுகிறாரே, இனி, அவர் வியாபாரம் என்ன ஆகும் என்று பயந்து போனேன். இப்போது அந்தப் பயம் போய்விட்டது...

சிங்: போதும்...போதும், உன் குறும்புத்தனம்...

கண்: பொய் பேசச் சொல்லி நீங்களே பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள். அழுத்தந்திருத்தமாகப் பொய் பேசுவது எப்படி என்று இவர் கற்றுக் கொடுக்கிறார். நல்ல உலகமப்பா இது... நல்ல உலகம்...

[வந்தவர் அசடு வழியும் முகத்துடன் விடை பெற்றுச் செல்கிறார். கண்ணாயிரமும் மாடிக்குச் செல்கிறான். சிங்காரவேலர் ஏதோ எண்ணிக் கொண்டு உலவுகிறார். சில்க் சட்டையும் 'கால்' கிராப்பும் உள்ள தோற்றமுள்ள ஒருவன் வருகிறான். அவனை அழைத்துக் கொண்டு தனி அறை சென்று பேசுகிறார்.]

சிங்: நாட்டியமாடும் நாடியா பழக்கந்தானே?

அவன்: அது ஏனுங்க! வேறே புதுமுகம்...சீட்டுப் போல பலது இருக்கு.

சிங்: இதோ, பாரய்யா! நான் என்ன கேட்கிறேன், எதுக்கு என்பதைத் தெரிந்து கொள்ளாமே!...

அவன்: நல்லா தெரியுதுங்க! நாடியா கொஞ்சம் பட படன்னு பேசும்...

சிங்: கொஞ்சமென்ன! நல்லாவே (குத்தலாக) பேசறா...