இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உலகம்
61
வ: இது நாடியா என்கிற நாட்டியக்காரியுடையது. அவளிடமிருந்து இதைப் பறித்துக் கொண்டீர், கருப்பனுக்கு இதையும் கைக்கடியாரத்தையும் இனாம் கொடுத்தீர் என்று கருப்பன் கூறுகிறான். என்ன சொல்கிறீர்?
(தயக்கத்துடன் சிங்காரவேலரைப் பார்க்கிறான். அவர் வாயை அசைத்துக் காட்டுகிறார், வெறுப்புடன்)
கண்: அண்டப்புளுகு!
[சிங்காரவேலர் முகம் மலருகிறது. நாடியாவைச் சாட்சிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்]
வ: (பையைக் காட்டி) இது உன்னுடையதா?
நா: இல்லை.
வ: கண்ணாயிரம் என்பவரை உனக்குத் தெரியுமா?
நா: தெரியாது.
[சிங்காரவேலர் மகிழ்ச்சிப் புன்னகை கொள்கிறார்.]
வ: கண்ணாயிரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
நா: ஓ!
[சிங்காரவேலர் திகைக்கிறார்.]
வ: பார்த்திருக்கிறாயா? எப்போது? எங்கே?
நா: இப்போது! இங்கே! கோர்ட்டில்...
[சிங்காரவேலர் முகம் மலருகிறது. இலேசாகக் கோர்ட்டில் சிரிப்பொலி கிளம்புகிறது. மேஜையைத் தட்டி ஒழுங்கை ஏற்படுத்திவிட்டு, வழக்கு மன்றத் தலைவர் தமது தீர்ப்பைப் படிக்கிறார்.]
வ: நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்த வழக்கு சம்பந்தமான சகல பிரச்சினைகளையும் சீர்தூக்கிப் பார்த்ததில், வீராயி, கருப்பன் இருவருமே குற்றவாளிகள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். வீராயிக்கு மூன்று மாத வெறுங்காவல்