உலகம்
65
உ: என்ன செய்யறதுன்னு தெரியலிங்க...ஒரே திகிலா இருக்குது...
சிங்: ஏலே...தண்ணியை வேறே பக்கம் திருப்பி விட்டால் என்ன?... கரும்புத் தோட்டப்பக்கம் கரை போடுங்க...வேறே பக்கம் இருக்கிற கரையை வெட்டி விடுங்க...
உ: செய்யலாமுங்க...ஆனா...
சிங்: ஏன், அப்பவும் தண்ணி கரும்புத் தோட்டத்துப் பக்கமாகத்தான் பாயும் என்கிறாயா?
உ : இல்லிங்க...ஒரு மணி நேரத்திலே தண்ணி முச்சூடும் வேறே பக்கம் போயிடும்...ஆனா, அந்தப் பக்கம் தான் 'குப்பம்' இருக்குதுங்க!...நம்ம பேர்லே இருக்குதுங்களே அது...
சிங்: இந்தப் பக்கம் கரும்புத் தோட்டமல்ல இருக்குது...டேய்! ஒரு பத்து ஆளைப் பிடிச்சி, கரையை வெட்டி, தண்ணியைத் திருப்பிவிடு...மளமளன்னு ஆகட்டும் வேலை...பெரிய மழை மறுபடியும் வர்றதுக்குள்ளே...சோம்பேறித்தனம் காட்டாதிங்க...பயிர் அழிஞ்சுது, அவ்வளவுதான் நீங்க...தொலைஞ்சிங்க, கூண்டோட...தெரியுதா?...ஓடு! ஓடு! கடாமாடு...குப்பத்து ஆட்களைக் கூப்பிடாதே, இந்த வேலைக்கு... தெரியுதா?
[உழவன் ஓடுகிறான்]
காத்தான் குட்டை பக்கம், உழவன் பத்து ஆட்களுடன் சென்று சிங்காரவேலர் சொன்னபடி செய்து விடுகிறான். சிங்காரபுரி என்ற குப்பம், வெள்ளக்காடாகி விடுகிறது. குப்பத்தில் ஒரே கூக்குரல்! குழந்தை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். வெள்ளம் 'குபுகுபு'வெனப் புகுந்து விடுகிறது; குடிசைகள் விழுகின்றன. முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு என்று வேகமாக ஏறுகிறது தண்ணீர். கால்நடைகள் தத்தளிக்கின்றன. நீந்தத் தெரிந்தவர்கள், மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். குழந்தைகள்
பூ-153-க-3