இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
ரொட்டித்
[சுப்புத்தாய் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுப் பிய்த்துப் போடுகிறாள் கோபமாக.]
ராம்லால்: (புத்தகத்தைத் தூக்கி எறிந்து) கொண்டு போய்ப் போடு, அடுப்பு நெருப்பிலே...ரொட்டித் துண்டு, ரொட்டித் துண்டு.
காட்சி—13.
இடம்: மணிமண்டபம், வெளிப்புறம்.
இருப்: பாரத்பூஷண், விழாத் தலைவர், விழா காண வந்தோர். தமிழாசிரியர்.
நிலைமை: மாலைகளை ஒருவர் மோட்டாருக்குப் போடுகிறார். விழாத் தலைவரிடம் விடை பெற்றுக் கொள்கிறான், பாரத் பூஷண். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஜே! ஜே! என்ற ஒலி எழுகிறது. பாரத், காரில் உட்காருகிறான். நாலைந்து பேர்கள் அருகே சென்று வணக்கம் கூறுகிறார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு தமிழாசிரியர் வருகிறார்.தமிழாசிரியர்: பாரதா! ரொட்டித் துண்டு. விலை 15 ரூபாய். நானோ பரம ஏழை. ஆகவே விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியவில்லை. இரவல் கேட்டால் யாரும் தருவதில்லை. ஆகவே, மாணவ மணியே! உடனே எனக்கு ஒரு ரொட்டித் துண்டு அனுப்பி வைக்க வேண்டும். கிடைத்ததும், நூலைப் பாராட்டி ஒரு அகவல் இயற்றலாம் என்று துடியாய்த் துடிக்கிறேன்.
பாரத்: ஆகட்டும்...அப்படியே...அனுப்புகிறேன்...
[மோட்டார் புறப்படுகிறது. சிலர் 'ஜே' போடுகிறார்கள்.]