3 காந்திஜிக்குப் பாராட்டு (1947-ம் ஆண்டு ஆகஸ்ட்(மாதம் 15 தேதியன்று இந்தியத் திருநாடு பூரண சுதந்திரம் பெற்ற பின்னர் அன்றைய மதறாஸ் சட்டசபை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று கூடி, இந் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்ததற்காக மகாத்மா காந்திக்குப் பாராட்டுத் தெரிவித்துத் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியது. அத்தீர்மானத்தை வழிமொழிந்து பேசும்பொழுது காயிதே மில்லத் அவர்கள் கூறியதாவது:-j இத்தீர்மானத்தை வழிமொழிந்து பேசுவதில் நான் பெருமைப் படுகிறேன். உண்மையிலேயே காந்திஜி ஒரு வரலாற்று நாயகர்தான். அவரு டைய செயல்களும், சாதனைகளும் சரித்திரமாய் ஆகிவிட்டன. இந்த நவநாகரீக கால அரசியல் களத்தில், அஜிம்சையையும், சத்தியாக்கிரகப் போராட்டத் தையும் மிகப் பெரிய அளவில், அவர் அறிமுகப் படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய கொள்கை, நிராயுத பாணியான மக்களிடத்தில் தைரியத்தைப் புகுத்தியது. சரியான கால கட்டத்தில் சுய உணர் வையும் அவர்களிடம் ஏற்படுத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்கு வகித்தார்கள். பெற்ற சுதந்திரத் தைப் பேணிக் காத்திடவும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தியாகங்கள் பல புரிந்து இந் நாட்டைப் பாதுகாப்பதிலும் அவர்கள் முன்னணி யில் நிற்பார்கன் என்பது தெளிவு. 4 கத்தியின்றி, ரத்தமின்றி Int.... இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகவும் பாடு பட்டவர் காந்திஜி. சமீபத்தில் கூட, கல்கத்தா வில் அப்படிப்பட்டதொரு ஐக்கியத்தை அவர் சாதித்துக் காட்டி இருக்கிறர். இப்பொழுதுங் எங்கெல்லாம் அவருடைய முயற்சியும், உழைப்பும் தேவைப்படுகிறதோ, அங்கெல்ணம் சென்று இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடு பட்டு இருக்கின்றர். அவருடைய முயற்சிகள் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள். ஒற்றுமை யைக் குலைக்கும் சக்திகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடனல்லாமல், அப்படிப்பட்ட செய்கை களுக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்பதிலும் தாங்கள் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பின்பு, முதன் முதலாக இந்த அவை கூடியிருக்கிறது. இந்த நல்ல வேளை யில், மனித இனத்தின் வரலாற்றில், சுத்தியின்றி ரத்தமின்றி, போராடி இம்மாபெரும் சாதனையை செய்து காட்டியிருக்கும், மகாத்மா காந்திஜியை யும், அவரோடு தோள் நின்று இச்சாதனையை நிகழ்ந்தி காட்டியிருக்கும் அனைவரையும் பாராட்டு வது மிக்க பொருத்தமானதாகும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கலாமா? [23-9-47 அன்று மதறாஸ் சட்டசபையில் ஆளுங்கட்சியை சார்ந்த திரு N. S. வரதாச்சாரி என்பவர் ஒரு ஒழுங்கு பிரச்சனையை கிளப்பினார். தனித் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர், மொத்த எதிர்க் கட்சியின் தலைவராக இருக்க முடியுமா? என்ற பிரச்சனையை கிளப் பினார். அதாவது எதிர்க் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லாருமே தனித் தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், பொதுத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களும் எதிர்க் கட்சி அளவில் இருக்கிறர்கள் என்றும், எனவே அவர்கள் எல்லோருக்குமாக சேர்ந்து தனித் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கலாமா? என்பதுதான் அந்த உறுப்பினரின் கேள்வி ஆகும். அப்போது காயிதே மில்லத் அவையில் கூறிய தாவது:- து "எனக்கு முன்பு பேசியவர்கள், ஆளுங் கட்சிக்கு அடுத்த படியாக அதிகமான உறுப்பினர் 272 களைக் கொண்ட கட்சியின் தலைவர்தான் எதிர்க் கட்சித் தலைவராக முடியும் என்பதை சந்தேகத் திற்கு இடமில்லாதவாறு விளக்கி விட்டனர்.
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/288
Appearance