உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று முறை அவரை நான் சந்தித்து தமிழ்நாட்டு நிலவரங்களைப் பற்றி பேசிய போதெல்லாம் அவர் என் வாயிலிருந்து என்ன வார்த்தையை எதிர்பார்த்தார் என்று கருதுகிறீர்கள்? நாங்கள் நிபந்தனையற்று உங்களை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இன்றைக்கு நான்தான் முதலமைச்சர். தி.மு.கழகம் தான் தமிழகத்தை இன்னும் ஆளுகின்ற கட்சியாக இருக்கும். கழக லட்சியங்களைக் காத்திட கண்ணீர், வியர்வை, ரத்தம்! ஆனால் அதற்கு இடந்தராத காரணத்தால், கொள்கைகளை விட்டுத் தராத காரணத்தால், நாங்கள் தேசீய முன்னணியிலிருந்து விலகி, பினாமி அரசை ஆதரிக்கத் தயாராக இல்லை என்ற முடிவை எடுத்த ரணத்தாலேதான் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. உதட்டசைவு, கண் அசைவு அன்றைக்கு நம் பக்கமிருந்து சந்திரசேகருக்கு கிடைத்திருக்குமேயானால் ஆட்சியை நாம் இழந்திருக்க தேவையில்லை. கழக அதற்காகத்தான் சொல்கிறேன். என்னுடைய தலைமையைப் பற்றி என்னுடைய அன்பிற்குரிய, திப்பிற்குரிய, மரியாதைக்குரிய என்னுடைய மூத்த கோதரராக நான் கருதிக் கொண்டிருக்கிற பேராசிரியர் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார். தனிப்பட்ட வருக்காக அல்ல. தமிழ்ச் அல்ல. தமிழ்ச் சமுதாயத்திற்காக அவர் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று பேராசிரியர் சொன்னார். நம்முடைய துணைப் பொதுச் சயலாளர் வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றி இங்கே எடுத்துக் காட்டினார். இரண்டாவது உலக யுத்தம் 13