உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு தொடங்கப்பட்ட முரசொலி பத்திரிகையின் ஆண்டு விழாவுக்கு அவரை அழைத்து வாழ்த்துரை வழங்கச் செய்த அந்த நாளெல்லாம் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. அடுத்து என்னை அழைக்கவில்லை என்று பேராசிரியர் சொன்னார். அடுத்து ஆண்டு விழா நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால் அவர் இல்லாமல் நடைபெற்றிருக்காது! பேராசிரியருடன் கொண்ட நட்பு கொள்கையால் வந்த உறவு ஏனென்றால் அவருக்கும் அவருக்கும் எனக்கும் இருக்கின்ற தொடர்பு - நட்பு - உறவு இது தனிப்பட்ட முறையிலே ஒரு கருணாநிதிக்கும், ஒரு அன்பழகனுக்கும் ஏற்பட்டுவிட்ட தொடர்பு அல்ல. நாங்கள் இருவரும் நண்பர்களாக சந்தித்துக் கொண்டவர்கள் அல்ல. நாவலரையாவது அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி நண்பராக சந்தித்திருக்கக்கூடும். அந்த வாய்ப்புக்கூட வாய்ப்புக்கூட எனக்குக் கிடையாது. என்னையும் அவரையும் ஒட்ட வைத்து இருவரையும் நண்பர்களாக ஆக்கியது கொள்கைதான். திராவிட இயக்கக் கொள்கைதான். அந்தக் கொள்கை வலுவாக அவர் உள்ளத்திலே இருந்த காரணத்தினால்தான் இங்கே நண்பர் மதுராந்தகம் ஆறுமுகம் குறிப்பிட்டதுபோல 1976-ம் ஆண்டு தலைமைப் பதவியிலிருந்தே கருணாநிதி விலக வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு, கருணாநிதி தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்டால் விலகிவிட்டால் இந்திரா காந்தியின் கோபம் குறையும். தி.மு.கழகம் தப்பும் என்று சிலர் கணக்கிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது 17