உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவலைப்படாதீர்கள் என்று சொல்லுகின்ற அந்த நிலை தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிறது. என்னோடு வந்தால் தீயைத் தாண்ட வேண்டும்! நம்மிடத்திலே ஆட்சி இல்லை. ஆட்சி இல்லை என்கிறபோது எந்த ஒரு கட்சிக்காவது இப்படி ஒரு கட்சித் தேர்தலில் இவ்வளவு பெரிய போட்டி இருக்கும் என்று நீங்கள் யாராவது கருதுகிறீர்களா? எனக்கே கூட ஒரு பயம்! ஒரு மகிழ்ச்சி! ஏ அப்பா! ஆட்சியில்லாமலே இவ்வளவு போட்டி என்றால் ஆட்சி இருந்திருந்தால் எவ்வளவு போட்டி இருந்திருக்கும் என்று கூட எண்ணியது உண்டு. ஆனால் எனக்குத் தெரியும். ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.கழகத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் என்கின்ற பெருமையை விட மாண்புமிகு. அமைச்சர் என்பதிலே பெருமை இல்லை என்பதை உணர்ந்தவர்கள்தான் எனக்கு இருக்கின்றீர்கள். (பலத்த கைதட்டல்) தம்பிகளாக என்றால், என்னோடு இருக்க வேண்டும் என்பின்னால் வரவேண்டுமென்றால் உடன்பிறப்புகளே என்னோடு வந்தால் தென்றலைத் தீண்ட முடியாது. நீங்கள், தீயைத்தான் தாண்ட வேண்டும். அக்னிப் பரீட்சைக்கு தயாராக இருப்பவர்கள்தான் எங்களோடு வர முடியும். அப்படி வந்திருக்கிற உடன் பிறப்புக்களைத்தான் இந்த மண்டபத்திலே மாவீரர்களாக, தளபதிகளாக, 20