உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தறிந்து திருச்சியில் அன்பில் முன்னின்று நடத்திய மாநாட்டில் அறிஞர் அண்ணா முடிவெடுத்து தேர்தலில் ஈடுபட்டோம். படிப்படியாக வெற்றிகளைப் பெற்றோம். வெற்றிகளைப் பெற்ற காரணத்தால் அண்ணா காலத்திலும் சரி, அண்ணாவுக்குப் பிறகும் சரி, பிறகு 89ல் நாம் வெற்றி பெற்ற பிறகும் சரி பெரியாரின் கொள்கை களை, சுயமரியாதை லட்சியங்களை, திராவிட இயக்கத் தின் கொள்கைகளை இன்றைக்கு நிறைவேற்றி வருகிறோம் என்றால், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவிகிதம் என்று நாம் அறிவித்தோம் என்றால் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காரணத்தால்தான். செங்கல்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரவேண்டும் என்ற தீர்மானத்தை நாம் சட்டமாக்கினோம் என்றால் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காரணத்தால்தான். எனவே ஆட்சிப் பொறுப்பும் தேவை. ஆனால் ஆட்சிப் பொறுப்பு மாத்திரமே லட்சியம் அல்ல. கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சிப் பொறுப்பு தேவை. அப்படியானால் கொள்கைதான் முக்கியம். அதை நிறைவேற்றுகின்ற கருவி ஆட்சிப்பொறுப்பு. கொள்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு கருவியை இழந்து விட்டால் கொள்கையை நிறைவேற்ற முடியாது. எனவே அந்த கருவியை இழந்துவிடாமல் இருப்பதற்காகத்தான், அந்தக் கருவியை பெறுவதற்காகத் தான் நாம் நம்முடைய இயக்கத்தை அதற்கேற்ற வகையிலே கூட பலப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். மன்னை சொன்னது போல மக்களிடத்திலே அறிவுத்தெளிவை ஏற்படுத்தியாக 24