உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அழிந்து வரும் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னம்"! சாலை இல்லை என்றால், சுகாதார வசதி இல்லையென்றால், தொற்று நோய் பரவுகிறது என்றால். பள்ளிக்கூடம் சீராக இல்லை என்றால், சாலைகள் பழுதடைந்து கிடக்கிறது என்றால், மருத்துவமனை இல்லையென்றால் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீங்களே அறவழிப் போராட்டங்களை நடத்த வேண்டும். இவைகளெல்லாம் நம்முடைய பேராசிரியர் அளித்த கொள்கை விளக்கங்களுக்கு செயல் வடிவங்கள் கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சிப் பொறுப்புத் தேவை. அந்த ஆட்சிப் பொறுப்புக்கு தேர்தல் தேவை. அந்தத் தேர்தலில் வெற்றி பெற உழைப்பு தேவை. தேர்தல் நேரத்தில் வந்து என்னை வேட்பாளராக ஆக்குங்கள் நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என்று சொன்னால் போதாது. அவர்களுடைய வேட்பாளர்கள் வேறு. நம்முடைய வேட்பாளர்கள் வேறு. அவர்களுடைய வேட்பாளர்கள் கொலைகாரர்களாக, குடிகாரர்களாக, கடத்தல்காரர் களாக இருக்கலாம். அவர்களுடைய வேட்பாளர்கள் அந்த ஊர்க்காரராக இல்லாதவராக இருக்கலாம். அது வேறு! அவர்கள் கதையே வேறு! ஏனென்றால் அழிந்து வருகின்ற ஒரு "கலாச்சரத்தின் அடையாளச் சின்னமாக ஒருவர் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.(பலத்த கைதட்டல்) எனவே அழிந்து வரும் நமது கலாச்சாரத்தை பிழைக்க வைத்து வாழ வைக்க வேண்டிய அந்தப் பெரும் பொறுப்பு 26