உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கதம்பம்

றாள் பயத்துடன். அவளுக்கு பொன்னம்பலத்தை தெரியும். ஆகவேதான், ஊரார் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சம், பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியைகள் அதற்குள், தங்கத்தைப் பற்றி பொறாமை கொண்டிருந்தார்கள், “தங்கம் தளுக்குக்காரி! கூந்தலைப்பார் எத்தனை கோணல்!” என்பாள் ஒரு ஆசிரியை,

“கோணல் அல்லடி கோமளம்! கர்ல்ஸ்—மாடர்ன் பேஷன்!” என்பாள் பிறிதொருமாது, உண்மையில் அது கர்ல்சுமல்ல, பேஷனுமல்ல! இயற்கையாக வளர்ந்து, கருத்து, மினுக்கி, சுருண்டு, அடர்ந்த கூந்தல் தங்கத்துக்கு! அதை கண்டு மற்ற பெண்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு கைவலிக்க சீவித்தான் பார்த்தார்கள். அந்த “சுருள் அழகு” அவர்களுக்கு வரவில்லை. அந்த வயிற்றெறிச்சலால் வம்பு பேசலாயினர் தங்கமும் இவற்றை நன்கு அறிவாள். தன் அழகை பரிமளிக்க செய்ய பணம் இல்லை என்பதும், தன்னை சமூகத்தில் அறிமுகப்படுத்தி வைக்க ‘நல்ல ஜாதி’ தனக்கு இல்லை என்பதும் தெரியும். ஆகவே தங்கம் சற்று ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள். மாதம் முப்பது ரூபாய் கிடைத்தது பள்ளியில்.

முனியம்மா என்ற மூதாட்டி வீட்டு காரியங்களை கவனித்து கொண்டாள்.

தங்கத்தின் ‘பொல்லாத வேளையோ’ என்னமோ, இதே முனியம்மாள் தான் பொன்னம்பதத்தை தூக்கி வளர்த்து வந்தாள் அந்த காலத்தில், அவள் சொல்லித் தான் தங்கத்திற்கு பொன்னம்பலத்தை தெரியும். “நீ என்ன ஜாதியம்மா” என்று கேட்பாள் மூதாட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/11&oldid=1770550" இலிருந்து மீள்விக்கப்பட்டது