உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதம்பம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கதம்பம்

பெற, அந்த வெற்றியினால் பலரும் நன்மைபெற, யாரேனும் கருணை உள்ளம் படைத்த ஒருவர், அவனுக்குத்தக்க சமயத்திலே ‘கை கொடுத்து’ உதவ முன் வரவேண்டும்; இல்லையேல் அவனுடைய திறமை, காட்டு மலராகும்—மீட்டுவாரற்ற வீணையாகும்—என் ‘இன்பக் கனவு’ பலித்ததற்குக் காரணம். தக்கார்க்குத் தக்கது செய்யும் தன்மை வாய்ந்த மன்னனின் உதாரம் தான்-என்று எண்ணி மகிழ்ந்தான்.

🞸🞸🞸

பெற்ற வெற்றியுடன் திருப்தி அடையவில்லை—இவை இனிப்பெற வேண்டிய பெருவெற்றியின் அடையாளங்கள் என்று கூறி மீண்டும் மன்னன் ஆணை பெற்று, மரக்கலம் ஏறினான்—மேலும் பல புதிய நாடுகளைக் கண்டறிய. இம்முறை, கொலம்பஸ் கிளம்பும்போது, அரச குடும்பமே தன்னை ஆசி கூறி வழியனுப்புவது கண்டான்—களித்தான். ஒரு நாட்டு மக்களே நல்வாழ்த்துக் கூறி அனுப்பிடக் கண்டு மகிழ்ந்தான். முதல் தடவை சென்றபோது, ஊர் மக்களின் ஏளனம் சிலருடைய ஆணவம்—மன்னனுடைய சந்தேகம் கலந்த அனுமதி—இவைகளே, கொலம்பசுக்குக் கிடைத்தவை. போகிறான் பிழைக்கத் தெரியாதவன்! என்று பேசினார் உண்டு; பிழைக்கத் தெரியாதவனா? அவனா? பிழைக்கத் தெரிந்தவன்; அதனாலே தான் புளுகு பேசி, மன்னனையே மயக்கிப் பொருள் பெற்றுக் கொண்டு போகிறான் என்று ஏசினோர் உண்டு; கடற் கொள்ளைக்காரனாகி விடுவான் என்று ஆருடம் கூறினர் சிலர்; கடலுக்குப் பலியாவான் என்று சபித்தனர் சிலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதம்பம்.pdf/31&oldid=1772211" இலிருந்து மீள்விக்கப்பட்டது