பக்கம்:கதாநாயகி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*95



"எனக்குப் போடலையே?"

"நான் போடுறேனே" என்று சொல்லித் தன் இலையில் இருந்த பிரியாணிச் சோற்றையும் கரித்துண்டங்களையும் ஒரு முனைக்கு ஒதுக்கி, எஞ்சியிருந்த இலையை அளவு பார்த்துக் கிழிக்க முனைந்தான். அப்போது, மீனாட்சி அம்மாள் ஒர் இலையுடனும் எவர்சில்வர் பிளேட்டில் பிரியாணியுடனும் அங்கு வந்து, "நீங்க சாப்பிடுங்க. ஊர்வசிக்கு இதோ, தனியே வைக்கிறேன்," என்று கூறினாள்.

ஊர்வசியும் அம்பலத்தரசனும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு புஷ்டியோடு பார்த்துச் சிரித்தவாறு, சாப்பிடத் தொடங்கினார்கள்.

மீனாட்சி அம்மாள் உள்ளே போய்விட்டாள்.

அவன் தன் இலையிலிருந்து அவள் இலையில் இன்னும் கொஞ்சம் பிரியாணியை அள்ளி போட்டான்.

அவள் மகிழ்வின் நிறைவுடன் அதை உண்டாள்.

"நான் போட்டேனே, அதற்குப் பதிலா நீ எனக்குத் தர வேணாமா?...."

அவனை அவள்வெட்கத்துடன் நோக்கினாள். "இது எச்சில்!..." என்றாள்.

"இனிமேல் எச்சில் நம்மளைக் கடந்ததாக்கும்! இல்லையா?

அவள் கூடுதலாகவே தன் இலையிலிருந்து பிரியாணியை எடுத்து அவன் இலையில் வைத்தாள்.

"எனக்குத்தான் லாபமாக்கும்!..."

"ஊஹும், எனக்குத்தான் லாபம்!"

"எப்படி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/105&oldid=1319170" இலிருந்து மீள்விக்கப்பட்டது