பக்கம்:கதாநாயகி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கதாநாயகி


கொட்டும் நேரம் அவன் அந்தச் சுகத்தில் திளைத்திருந்தான். சுயசிந்தனை சிலிர்த்தது. "ஊர்வசி, உன் லெட்டரைப் படிச்சுப் பார்த்தேன். உன் கடிதத்தை அப்படியே நான் அங்கீகரிக்கிறேன். உன்னையே அங்கீசித்துக் கொண்டவன் அல்லவா நான்!..." என்று தீர்ப்பு வழங்கினான் அம்பலத்தரசன். அவளை உன்னிப்பாகப் பார்வையிட்டான். "என் உயிர் உடலிலே தரித்திருக்கும் வரை, என் உயிருக்கு நீ தான் மூச்சு, ஊர்வசி!" அவளது கோல விழிகளில், ஆனந்தக் கண்ணிர் கோலம் இட்டிருந்தது. "என் பாக்கியமே பாக்கியம், அத்தான்!..." உருக்கத்துடன் மகிழ்ந்தாள் அவள். மீனாட்சி அம்மாள் தலையைக் காட்டினாள். "அப்புறம் என்ன திட்டம், மாப்பிள்ளை?" என்று கேட்டாள். - "எனக்கின்னு இனிமேல் தனித்திட்டம் எதுவும் இல்லீங்க." "அப்படியானால் ஆவணியிலேயே முகூர்த்தம் வச்சுப்பிட வேண்டியதுதானுங்களே!" . §: (3ો. fr!” நாணமும் நாணமும் முயங்கின. அவன் புறப்பட எழும்பினான். "இங்கேய்ே நீங்க படுத்திருக்கலாமே. அத்தான்? மெல்லொலியில் சொன்னாள் ஊர்வசி. . . "ஆவணி பிறந்திடட்டும். ஊர்வசி!..." GDమGaుగా60ు சிரித்தான் அம்பலத்தரசன். "...'. - அவளுடைய மார்பகத்தில் பதிந்திருக்க தங்கச் சங்கிலியின் பதக்கம் ஊசலாடிக்கொண்டிருந்தது. "நான் இப்போது சொன்னதானது சாதாரண அர்த்தத்திலேதானுங்களே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/108&oldid=1284050" இலிருந்து மீள்விக்கப்பட்டது