பக்கம்:கதாநாயகி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஏற. உரு ஏறித் திகழ்ந்த திருநிறைச்செல்வியென வந்து நின்றாள் ஊர்வசி. "வா, ஊர்வசி!" என்று மீண்டும் ஒரு தரம் வரவேற்புச் சொன்னான் அம்பலத்தரசன். தன்னை வியப்புவிரிய விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூமிநாதனைக் கடைக் கண்ணால் பார்த்தான் அவன். அவள் அந்த முடன் மூரல் சிந்தி நடந்து வந்து நிலைப்படியில் நின்றாள். "வாங்க ஊர்வசி!" என்றான் பூமிநாதன். அவளது இதழ்க் கங்குகளில் புன்னகை மலரத் தொடங்கியது. இதழ்களின் துடிப்பு மிகுந்தது. "செளக்கியமாய் இருக்கீங்களா, வில்லன் ஸ்ார்?" என்று கேட்டுக் கொண்டே, படர்ந்த சிரிப்புப் பதறாமல் வினவினாள் ஊர்வசி. - "நல்ல சுகம்தான்!" பூமிநாதனின் வாய்ச்சொற்கள் தடுமாறின. - "உட்கார்," என்று குறித்தான் அம்பலத்தரசன். அவள் பாங்குடன் உட்கார்ந்தாள். காதுச் சிமிக்கிகள் குலுங்கின. நெற்றித் திட்டில் திலகம். மாரகச் சேலையை இழுத்து விட்டுக் கொண்டாள் அவள். ஆகாய வர்ண ஆர்க்கண்டி சேலையும் கறுப்பு நிறச் சோளியும் கச்சிதமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/129&oldid=1349864" இலிருந்து மீள்விக்கப்பட்டது