பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யெல்லாம் அவருக்கு ஓரளவுதான் புகழ் தேடித் தந்தன. ஆயினும், அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தவை அவரது குழந்தைக் கதைகளே! ஆம், ஓய்வு நேரத்தில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர் சொன்ன கதைகள்தாம் அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தன !

குழந்தைகளுக்கு மத்தியிலே உட்கார்க்து கொண்டு கதை சொல்லுவதிலே ஆண்டர்சனுக்கு ஒரு தனி இன்பம். அவர் கதை சொல்லும்போது, நேருக்கு நேராகக் கதாபாத்திரங்கள் வருவது போல் இருக்குமாம். அபிநயத்துடன் ஆடிப்பாடிக் கொண்டே கதை சொல்லுவாராம். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுத் துள்ளிக் குதிப்பார்களாம்.

வெகு விரைவில் அவருடைய குழந்தைக் கதைகள் புத்தகங்களாக வெளிவந்தன. புத்தகங்களாக வெளி வந்ததோடு அக்கதைகள் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கின. கதைகளுடன் ஆண்டர்சனின் புகழும் பரவியது.

டென்மார்க் தேச அரசாங்கத்தார் ஆண்டர்சனுக்குப் பணம் கொடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடுகளுக்கு அவர் போவதற்கு முன்பே அவருடைய கதைகள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டதால், அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. புகழ்

19