உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவரும் குனிந்து உற்றுப் பார்த்தனர். உடனே, அவர்களுக்கு ஒரே ஆனந்தம்! “கம்பி வழியாக இவனை உள்ளே அனுப்பி வைக்கலாம். உள்ளேயிருந்து, நமக்கு வேண்டியதையெல்லாம் எடுத்து, எடுத்துத் தருவான்” என்று நினைத்து, அவனைத் தூக்கிக் கொண்டு நேராகப் பிரபு வீட்டுக்குச் சென்றார்கள். கம்பி வழியாக டாமை உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்றதும், டாம் திருடர்களுக்கு உதவி செய்யவில்லை; ஒரேயடியாகக் கூச்சல் போட ஆரம்பித்து விட்டான். கூச்சலைக் கேட்டு, வீட்டிலிருந்த எல்லோரும் எழுந்தார்கள்; விளக்கை ஏற்றிக் கொண்டு, அறைக்குள் ஓடி வந்தார்கள். நிலைமை அறிந்து, ‘தப்பித்தோம். பிழைத்தோம்’ என்று தலை தெறிக்க ஓடி விட்டார்கள் திருடர்கள்! டாமும் மெதுவாக நழுவி, பின்புறமிருந்த தோட்டத்திற்குச் சென்றான். அங்கிருந்த வைக்கோல் போரில் ஒளிந்து கொண்டான்.

சிறிது நேரம் சென்றது. டாம் வைக்கோல் போரில் படுத்து, நன்றாகத் தூங்கலானான். வெகு நேரம் ஆனதும், விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஒரே இருள்! மூச்சுத் திணறியது. எங்கே இருக்கிறோம். என்பது அவனுக்குப் புரியவில்லை. பாவம், வைக்கோல் போரில் படுத்திருந்த அவனை அப்படியே, வைக்கோலுடன் கொண்டு வந்து, பசுவுக்குப் போட்டு விட்டாள் அந்த வீட்டு வேலைக்காரி, நல்ல வேளையாக, அந்தப் பசுவின் பற்களில் அவன் அகப்படாமல் நேராக வயிற்-

764-3

37