பின்பக்கமுள்ள கதவிலே ஒரு துவாரம் இருந்தது. அதன் வழியாக, ஓநாய் உள்ளே புகுந்தது. அங்கிருந்த ஆகாரத்தை வயிறு முட்டத் தின்றது, பிறகு வெளியே வர முயன்றது. வயிறு உப்பியிருந்ததால், ஓநாயால் கதவுத் துவாரத்தின் வழியாக வெளியில் வர முடியவில்லை.
அந்தச் சமயம் பார்த்து, டாம் சத்தம் போட ஆரம்பித்து விட்டான். “அப்பா, அப்பா! ஓடி வா அப்பா, சீக்கிரம் வர அப்பா” என்று கூக்குரலிட்டான். சத்தத்தைக் கேட்ட விறகு வெட்டியும், அவன் மனைவியும் எழுந்து, ஓடி வந்தனர். ஓநாயைக் கண்ட தும், “இது என்ன! ஓநாய் பேசுகிறதே!” என்றான் விறகு வெட்டி.
“இல்லையப்பா, சத்தம் போடுவது நான்தானப்பா. உங்கள் மகன் டாம்தானப்பா. ஓநாய் வயிற்றுக்குள்ளே அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான் டாம்.
விஷயத்தைப் புரிந்து கொண்ட விறகு வெட்டி, உடனே மூலையிலிருந்த தடியைக் கையிலே எடுத்தான், ஓநாயின் தலையில் ஓங்கி ஓர் அடி போட்டான். மண்டை பிளந்து ஓநாய் கீழே விழுந்து இறந்தது. பிறகு பக்குவமாக ஓநாயின் உடலைக் கிழித்தான். விறகு வெட்டி. உள்ளேயிருந்து, ஒரு தாவுத் தாவி வெளியில் வந்தான் டாம். “என் கண்ணே! உன்னைக் காணாமல், என் மனம் என்ன பாடு பட்டது!” என்று அவனை அன்போடு தூக்கி, ஆசையோடு முத்தமிட்டாள் அவனது அருமை அம்மா. டாம், தான் செய்த வீர தீரச் செயல்களையெல்லாம் அம்மா, அப்பாவிடம் சொல்லி அவர்களை மகிழ்வித்தான்.
39