உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ற்றங்கரையிலே ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் அடியிலே இருந்த ஒரு பொந்தில் ஓர் அம்மா முயலும், நான்கு குட்டி முயல்களும் வசித்து வந்தன.

ஒரு நாள், அம்மா முயல், குட்டி முயல்களைப் பார்த்து, “நான் கடைக்குப் போய் ரொட்டி வாங்கி வருகிறேன். நீங்களும் வெளியே போவதானால் போகலாம். ஆனால், ஒன்று மட்டும் ஞாபகத்தில் இருக்கட்டும். அந்த மாக்சிகார் தோட்டத்துப் பக்கம் போய் விடாதீர்கள்! அந்த மனிதர் மிகவும் பொல்லாதவர். முன்பு ஒரு சமயம், உங்கள் அப்பா அவரிடம் அகப்பட்டுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு விட்டார். ஆகையால், அங்கு போகவே போகாதீர்கள்!” என்று எச்சரித்து

44