உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரிக்ஸ் பாட்டர் வரைந்திருப்பது நமக்கெல்லரம் மிகவும் வியப்பூட்டுகிறதல்லவா?

வியப்பூட்டும் இந்த எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறும், நமக்கு வியப்பாகவே இருக்கிறது. பெரிய பணக்காரக் குடும்பத்திலே அவர் பிறந்தார். லண்டன் மாநகரிலே அரண்மனை போன்ற ஒரு பங்களாவிலே வளர்ந்தார். இப்போது, ஆயிரக்கணக்கான குழந்தைகளை மகிழ வைக்கும் அவர், குழந்தையாக இருந்த போது, மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை அறியாமலே வாழ்ந்து வந்தார். ‘பணக்கார வீட்டில் ஏன் பிறந்தோம்?’ என்று எண்ணி, எண்ணி அவர் வருந்துவாராம். இதற்குச் சரியான் காரணம் இருந்தது.

அவருடைய அம்மா, அப்பா மிகவும் கண்டிப்பானவர்கள். ‘வெளியிலே போகக் கூடாது, மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடக் கூடாது’ என்றெல்லாம் அடிக்கடி உத்தரவு போடுவார்கள். “எதற்காக வெளியில் போக வேண்டும். அரண்மனை போல, வீடு இருக்கிறது. அழகான தோட்டம் இருக்கிறது. ஏழைக் குழந்தைகளுடன் சேர்ந்தால், கெட்டுப் போய் விடுவாய்” என்று கூறுவார்கள்.

சரி, பள்ளிக் குழந்தைகளுடனாவது சேர்ந்து இருக்கலாமென்றால், அதற்கும் வழியில்லை. ‘பணக்காரக் குழந்தை பள்ளிக்கூடத்திற்கு ஏன் போக வேண்டும்? ஆசிரியைக்குச் சம்பளம் கொடுத்தால், வீடு தேடி வந்து பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போகிறாள்’ என்ற நினைப்பு பெற்றோர்களுக்கு! அதனால், வீட்டிலேயே கல்வி கற்பதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஓடி, ஆடித் தொழிகளுடன் விளையாட வேண்டிய வயதிலே

52