பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

வார்கள். தலையெழுத்தோடு வருகிற நாம் எத்தனை காலம் இந்த வீட்டில் வாழ்வோம் என்று சொல்ல முடியாது. "இருக்கிற காலத்திற்குள் கொஞ்சம் நல்ல காரியம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆண்டவனே, உன்னை ஒரலாம் என்றாலும், உன்னை உன்னலாம் என்றாலும், உன் தாளை மலரிட்டுச் சேரலாம் என்றாலும் இந்த வீட்டிலே எனக்குச் சத்துருக்களாக வந்திருக்கிற ஐந்து பாவிகளும் என்னை விடுவதில்லையே! இங்கே நான் ஆசைப்படும்படி எதையும் செய்யக்கூடிய சுதந்திரம் இல்லை. என்னுடைய ராஜ்யமாக இருக்க வேண்டிய இந்த உடம்பிலே, ஐந்து பேர்கள் என்னை அடக்கி ஒடுக்கித் தங்களுடைய ராஜ்யமாக வைத்துக் கொண்டு என்னை ஆட்டி வைக்கிறார்கள். அவர்களுடைய கொட்டத்தை அடக்க எனக்கு ஆற்றல் இல்லையே! என்ன செய்யட்டும்?" என்று பேசுகின்றார் அருணகிரி முனிவர்.

முருகன் கேட்கிறான். "உன்னுடைய பொறிகளை அடக்கி, உன் மனத்தை ஆளக்கூடிய திறமை உனக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்? என்னிடம் எதற்காக வந்து சொல்லுகிறாய்?" என்று கேட்கிறான். அவர் சொல்கிறார்.

2

சூரசங்காரம்

சென்று தேவர்உய்யச்
சோரநிட் டுரனைச் சூரனைக்
காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே.

"அப்பா, உன்னுடைய பெருமை எனக்குத் தெரியும். தேவர்களுக்கு எல்லாம் நீதான் பிழைப்புக் கொடுத்தாய் எனப் புராணங்கள் பேசுகின்றன. அவர்களுக்குச் சொந்தமான அரசு தேவலோகம். அதை மகா பாவிகளாகிய சூரபன்மன் முதலிய அசுரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்திரன் மகனாகிய சயந்தனைச் சிறையில் அடைத்தார்கள். இந்திரன் மனையாட்டி

152