பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அவளை அடித்தாரே, அதுமாதிரி என்னை யாராவது சிறு வயசிலிருந்தே அடித்திருப்பார்களானால் நான் எப்பொழுதோ உயர்ந்திருப்பேனே" என்றார். அவர் சிவபக்தராதலின் அப்படி எண்ணினார். நல்லவற்றையே நினைப்பதற்கும் தனிமனப்பக்குவம் வேண்டும்.

ஆஞ்சநேயர் பண்பு

ம்பராமாயணத்திலே ஓர் இடம். ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை போகிறார். இலங்கையிலே சீதையை எங்கும் காணவில்லை. அவர் மனம் துடியாய்த் துடிக்கிறது. "ராமபிரான் சீதையைக் கண்டு வருவேன் எனக் காத்திருப்பாரே; அவருக்கு என்ன சொல்கிறது? சீதையைக் காணோமே! அந்தப் பாவி ராவணன் சீதையை என்ன செய்திருப்பானோ?

"கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கோளரக்கன்
தின்றானோ"

என்று நினைத்து வேதனைப்படுகிறார். வேறு சிலர், "அவன் சீதையைக் கெடுத்திருப்பானோ? அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ?" என்று எண்ணலாம். மனத்தாலும் அவன் அவளைக் கெடுத்திருப்பானோ என்ற ஐய நினைப்பு ஆஞ்சநேயருக்கு உண்டாகவில்லை. இது அவருடையது தூய உள்ளப் பண்பைக் காட்டுகிறது.

இப்படித்தான் நல்ல குணம் படைத்தவர்கள் உலகிலுள்ளவற்றையெல்லாம் நல்லனவாகவே நினைக்கிறார்கள். இறைவன் இடத்தில் அன்பு மீதுார்ந்துவிட்டால் எல்லாப் பொருள்களிடத்திலும் இறைவனுடைய தொடர்பையே காண்கிறார்கள்.

முருகனுடைய பக்தர்களுக்குக் கோழி கூவுவதைக் கேட்டவுடனே விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கொக்கறுகோ என்ற ஒலி முருகனுடைய நினைவை உண்டாக்குகிறது.

உலகத்துக் கோழி

லகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு எழுந்துவிடுகிறார்கள். எழுந்தவுடன் இருள் நீங்குவதில்லை என்

332