பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவற் பதாகை

களை உடைய பெரிய முட்டையைப் போலப் பிரபஞ்சம் இருக்கிறது. இதைத்தான் அண்டம் என்று சொல்வர். அண்டம் என்பது முட்டைக்கே ஒரு பெயர்; பிரபஞ்சத்திற்கும் பெயர். அந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றி மண்ணால் ஒரு சுவர் எடுத்தாற்போல அதன் எல்லை இருக்கிறது. அது கண்ணுக்குத் தெரிவது அன்று. ஆனாலும் அந்த எல்லை இருக்கிறது. அந்தப் பிரபஞ்ச எல்லையாகிய சுவர் உடைபட்டது; தூள்தூளாக விழுந்தது.

பிறவிக்கடல்

வற்றின் உட்கருத்து என்ன? பிறவியைப் பெருங்கடல் என்று சொல்வது வழக்கம். ஒரு கடலுக்கும் மற்றொரு கடலுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிராந்தியத்திலுள்ள நீர் பரப்புக்கு இந்துமகா சமுத்திரம் என்றும், பசிபிக் மகாசமுத்திரம் என்றும் வேறு பெயரிட்டு அழைக்கவில்லையா? அதைப் போலப் பிறவிப் பெருங்கடலுக்குக் கரை இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிறவியைத் தனியாகப் பார்க்கிறோம். முருகப் பெருமானது கையிலுள்ள கோழி சிறகை அடித்த மாத்திரத்தில் பிறவிப் பெருங்கடல் கிழிந்துவிட்டது; பிறவித் துன்பம் இல்லையாகி விட்டது.

பிரபஞ்ச வாசனை

னி வரும் பிறவி இல்லை; இப்பொழுது வந்த பிறவி என்ன ஆயிற்று? இந்தப் பிறவியில் பிரபஞ்ச சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று ஆச்சரியப்பட்டவர் அல்லவா அருணகிரியார்? இந்தப் பிறவியில் இருந்த பற்றுக்கள் யாவும் உடைபட்டுவிட்டன.

இறைவன் திருவருளினால் உலகம் தோன்றியது. எங்கும் இறைவன் மயமாகவே இருந்தும் அவனை நம்மால் காண முடியவில்லை; அதற்குக் காரணம் மாயை இருள்.

"பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்"

என்பர் திருமூலர். இறைவனிடம் நாட்டம் இல்லாதவர்களுக்கு உலகம் பெரிய முட்டையாக வட்டமாக இருக்கும். ஆனால்

337