பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உட்கார்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின் முத்திரையினால் விளக்கினான். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.
   “கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ றங்கமுதற்
   கற்ற கேள்வி
   வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
   மறைக்கப் பாலாய்
   எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
   இருந்து காட்டிச்
   சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
   தொடக்கை வெல்வாம்"
என்று பரஞ்சோதி முனிவர் தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடுகிறார்.

கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அநுபவ ஞானம்

றைவன் கல்வியினால் அறிய முடியாத பொருள்; அறிந்தேன் என்பவர்களால் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டிருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அநுபவம் தோற்றி, மோனம் தலைப்படும்.

இதனை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகவும் நன்றாக ஒரு கதையின் வாயிலாகச் சொல்கிறார். ஒரு பெளராணிகர் பாகவதத்தைப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தார். தாம் படித்த

78